ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலுக்கு அவருடைய தரப்பு மறுப்பு தெரிவித்தி ருக்கிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி யுள்ளது. டிசம்பர் 21-ம் தேதி வாக்கு பதிவும், 24-ம் தேதி தேர்தல் முடிவும் வெளியாக வுள்ளது.
ரஜினி மற்றும் கமல் இருவருமே அரசியலில் இறங்க வுள்ளதால், ஆர்.கே.நகர் தேர்தலில்
இவர்க ளுடைய பங்களிப்பு என்பது சுத்தமாக இருக்காது என்று கருதப் படுகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பா ளராக விஷால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளி யாகியது.
இது குறித்து விஷால் தரப்பில் விசாரித்த போது, "விஷாலிடம் சில கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவது உண்மை தான்.
ஆனால், போட்டி யிடுவது குறித்து அவர் எந்தவொரு முடிவையுமே எடுக்க வில்லை.
தற்போது 'இரும்புத்திரை' இறுதிக் கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படப்பிடிப் பில் கவனம் செலுத்த விருக்கிறார்" என்று தெரிவித் தார்கள்.
மேலும், விஷாலுக்கு நீண்ட நாட்களா கவே தனிக்கட்சி தொடங்கு வதற்கான ஆசை யுள்ளது.
ஆனால் தற்போது நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பல பணி களுக்கு
இடையே அரசியல் கட்சி தொடங்கு வதற்கு வாய்ப் பில்லை என தெரிகிறது.
Thanks for Your Comments