விமானத்தில் பாலியல் தொல்லை... அலறிய நடிகை !

0
ஆமீர்கான் நடித்த தங்கல் இந்தி திரைப்படத்தில் அவரது மகளாக நடித்தவர் நடிகை ஜைரா.
விமானத்தில் பாலியல் தொல்லை... அலறிய நடிகை !
காஷ்மீரைச் சேர்ந்த 17 வயது ஜைரா, கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா விமான த்தில் சென்றார். 

விமானம் தரை யிறங்கும் போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுடை யவர், தனது காலால் ஜைராவை சீண்டிய தாகக் கூறப் படுகிறது.

விமானம் தரையி றங்கிய பிறகு உடனடி யாக தனக்கு நேர்ந்த கொடுமை களை விளக்கி சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டார். 
இது வைரலாக பரவியது. இதையடுத்து ஜைராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வரை ஞாயிற்றுக் கிழமை இரவு சஹார் பகுதி போலீஸார் கைது செய்தனர். 

அவரது பெயர் விகாஸ் சச்தேவா (39) என்று தெரிய வந்துள்ளது. இவர் மும்பையில் உள்ள சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவன த்தின் மூத்த செயல் அதிகாரியாக இருக்கிறார்.

போலீஸாரிடம் விகாஸ் கூறும் போது, நான் மிகவும் களைப் படைந்திருந்தேன். தவறுதலாக அவர் மீது என் கால் பட்டிருக்கலாம். பாலியல் சீண்டல் எதுவும் செய்ய வில்லை என்று கூறியிருக்கிறார்.

மனைவி மறுப்பு
விகாஸின் மனைவி கூறும் போது, நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் உள்நோக்கம் எனது கணவருக்கு இல்லை. 

என் கணவர் அப்பாவி. எங்கள் குடும்பத்தில் இளம் வயதுடைய ஒருவரின் இறப்புக்கு சென்று வந்தார். 

அதனால் 24 மணி நேரம் அவர் தூங்க வில்லை. அவர் குடும்பத் தலைவர். இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார். எங்களுக்கு நீதி வேண்டும்’’ என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings