போர்ச்சுகல் வாலிபர் நூதன முறையில் பிச்சை !

0
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த நாட்டிற்கு செல்ல பணம் இல்லாததால் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் நேற்று நூதன முறையில் வருவோர், போவோர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டு இருந்தார். 
போர்ச்சுகல் வாலிபர் நூதன முறையில் பிச்சை !
அவர் கையில் ஒரு பந்தை வைத்திருந்தார். அந்த பந்தை வைத்து அவர் வித்தை காட்டி, பிச்சை கேட்டார். டிராவல் டொனேசன் (பயணத் திற்கு தானம்) என்று ஆங்கில த்தில் எழுதப் பட்ட பதாகையை வைத்தி ருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வேகமாக வந்து அவரிடம் இது போன்று இங்கே நீங்கள் செய்யக் கூடாது, உங்கள் பெயர் என்ன? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து அங்கே கூட்டம் கூடி விட்டது. 

போலீசாரின் கேள்வி களுக்கு பதில் அளிக்காமல் அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் எழும்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings