முஷாரப் ஒரு கோழை... நவாஸ் ஷெரீப் !

0
வெளிநாட்டில் பதுங்கியுள்ள சர்வாதிகாரி முஷாரப் ஒரு கோழை. தைரிய மிருந்தால் அவர் நாடு திரும்பி தன் மீதுள்ள வழக்கை சந்திக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
முஷாரப் ஒரு கோழை... நவாஸ் ஷெரீப் !
பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப், கடந்த 1999ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் அரசை கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்தார். கடந்த 2008 வரை ஆட்சியில் இருந்தார். 

கடந்த 2007ம் ஆண்டு நவம்பரில் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தி நீதிபதி களை கைது செய்தார். அவர்களின் அதிகாரத்தையும் குறைத்தார். 

இந்நிலையில், கடந்த 2013ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த நவாஸ் ஷெரிப், முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தார். 

கடந்தாண்டு மருத்துவ சிகிச்சை பெற அனுமதி கோரிய முஷாரப்புக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இதை யடுத்து, துபாய் சென்ற அவர் நாடு திரும்பாததால் அவரை தலை மறைவு குற்றவளி யாக நீதிமன்றம் அறிவித் துள்ளது. 

இது பற்றி ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் நேற்று அளித்த பேட்டியில், முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் ஒரு கோழை.
அவர் வெளிநாட்டில் தலை மறைவாக உள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால் நாடு திரும்பி தன் மீதான வழக்குகளை சந்திக்க வேண்டும். 

அந்த துரோகியை நாங்கள் கொண்டு வந்து நீதியின் முன் நிறுத்துவோம். முஷாரப்பை நீதிமன்றம் திரும்ப கொண்டு வந்து அவரது பாவங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings