விஷாலை கமல் ஆதரிக்கிறாரா? ஆர்.கே. நகர் தேர்தல் !

0
நடிகர் கமலஹாசன் எதைச் செய்தாலும் சரியாகத் தான் செய்வார். அமைச்சர் களுக்கும் அவருக்கு மானப் பிரச்னையில் தமிழ் திரையு லகமே அவருக்குப் பின்னால் நிற்கும் இதைச் சொன்னவர் நடிகர் விஷால்.
விஷாலை கமல் ஆதரிக்கிறாரா? ஆர்.கே. நகர் தேர்தல் !
அரசு தரப்பில் அமைச்சர்கள் கமல ஹாசனை எதிர்த்துப் பேசத் துவங்கிய போது, கமலஹாச னுக்கு ஆதரவாக வலுவாக குரல் உயர்த்திய வர்களில் முதன்மை யானவர் நடிகர் விஷால் தான். 

இவர் தான் இப்போது சுயேட்சை யாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டி யிடுகிறார். 2015-ல் நடிகர் சங்கத் தேர்தல், 2017-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் என இரு தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்ற விஷாலுக்கு, 

ஆரம்பத்தில் இருந்து உறுதுணையாக இருந்தவர் நடிகர் கமலஹாசன். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு 

அடிக்கல் நாட்டு விழா விஷால் தலைமையில் நடந்த போது, அதில் பங்கேற்று கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியவர் நடிகர் கமலஹாசன். 
இப்படி நடிகர் கமலஹாசன் - விஷால் ஆகியோரின் நட்பு அண்மை காலமாக மிக நெருக்க மாகவே இருந்து வருகிறது.

இந்நிலை யில் தான், ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டி யிடுவதாக அறிவித்தி ருக்கிறார் நடிகர் விஷால். 

சுயேட்சை யாக போட்டி யிடுவதாக அறிவித் துள்ள விஷால், திங்கட்கிழமை (4ம் தேதி) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ள தாகவும் அறிவித்தி ருக்கிறார். 

இந்நிலை யில், விஷாலுக்கு தனது ஆதரவை கமலஹாசன் தெரிவிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப் படுகிறது.
தீவிர அரசியலில் இறங்கு வதாக நடிகர் கமலஹாசன் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்.

அதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தன் தரப்பில் விஷாலை போட்டியிட கமலஹாசன் முன்மொழிந்தி ருப்பதாகச் சொல்லப் படுகிறது. 

அரசியல் கட்சி துவங்கு வதற்கு முன்னால், சுயேட்சை யாக களமி றங்கும் விஷாலை கமலஹாசன் ஆதரிக்கக் கூடும் என்றும், அதற்கான அறிவிப்பை கமலஹாசன் வெளியிடுவார் என்றும் சொல்லப் படுகிறது. 

தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கங் களை நடத்த திட்ட மிட்டுள்ள கமலஹாசன், ஆர்.கே. நகரில் இருந்து அதைத் துவங்கக் கூடும் என்றும் சொல்லப் படுகிறது.

கடந்த சில மாதங்க ளாகவே அரசியல் கருத்துக் களை சொல்லி வரும் கமலஹாசன், இந்த தேர்தலில் ஒரு நிலைப்பாடு எடுப்பது என்பது மிக அவசியம். 
அதற்காகக் கூட விஷாலை கமலஹாசன் முன்னிறுத்தி இருக்க லாம் என்கின் றனர் அரசியல் நோக்கர்கள். 

விஷாலுக்கு ஆதரவாக கமலஹாசன் குரல் எழுப்புவாரா? இல்லை தனி ஆளாக விஷால் களம் காண்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings