அதிவேக இண்டர்நெட்... ஜியோ முதலிடம் !

0
மத்திய டெலிகாம் ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்தியாவில் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய 
அதிவேக இண்டர்நெட்...  ஜியோ முதலிடம் !
நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அக்டோபர் மாத நிலவரப்படி நொடிக்கு 21.8 எம்.பி. வேகத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கி யுள்ளது. 

இதே மாதத்தில் ஐடியா செல்லுலார் தனது அதிவேக டவுன்லோடு வேகத்தை வழங்கி யுள்ளது. அந்நிறுவனம் நொடிக்கு 7.1 எம்பி வேகம் வழங்கி யுள்ளது.

வோடபோன் நிறுவனமும் தனது அதிகபட்ச வேகத்த வழங்கியி ருந்தாலும், ஜியோ இருமடங்கு அதிவேக இண்டர்நெட் வழங்கியுள்ளது. 

அக்டோபர் மாதத்தில் வோடபோன் நொடிக்கு 9.9 எம்பி வேகத்தில் இண்ட்ர்நெட் வழங்கியுள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜியோ டவுன்லோடு வேகம் குறைந்துள்ளது.
செப்டம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 21.9 எம்பி வரை இருந் துள்ளது. 

பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற போட்டி நிறுவன ங்களும் தங்களது அதிகபட்ச வேகத்தை வழங்கி யுள்ளன. 

இவை முறையே நொடிக்கு 9.3 எம்பி மற்றும் 8.1 எம்பி வரை இருந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மொபைல் டேட்டா வேகங் களை மை ஸ்பீடு செயலி மூலம் சேகரித்து தகவல் களை வழங்கு கிறது. 

அப்லோடு வேகத்தை பொருத்த வரை ஐடியா செல்லுலார், வோடபோன் நிறுவனங்கள் முறையே நொடிக்கு 6.2 எம்பி மற்றும் 4.9 எம்பி வழங்கியுள்ளன. 

பாரதி ஏர்டெல் நொடிக்கு 3.9 எம்பி வேகம் வழங்கியுள்ளது. தினசரி அடிப்படையில் ஜியோ நெட்வொர்க் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 19.6 எம்பி முதல் 25.2 எம்பி வரை இருந் துள்ளது. 
வோடபோன் நெட்வொர்க் டவுன்லோடு வேகம் நொடிக்கு 6.8 எம்பி முதல் 9.3 எம்பி மற்றும் ஐடியா நிறுவன த்தில் நொடிக்கு 8.6 எம்பி முதல் 9.8 எம்பி வரை இருந் துள்ளது. 

ஏர்டெல் நிறுவனம் நொடிக்கு 4.9 எம்பி முதல் 8.7 எம்பி வரை வழங்கி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings