அம்ருதா மீது புகார் அளிப்பேன்: டிடிவி. தினகரன் ஆதரவாளர் | Complaint against Amrita: DTV. Dinakaran's supporter !

0
ஜெயலலிதா மகள் என்று கூறி வரும் அம்ருதா என்கிற மஞ்சுளா மீது போலீஸில் புகார் அளிக்க இருப்பதாக டிடிவி. தினகரன் ஆதர வாளரான புகழேந்தி தெரிவித் துள்ளார்.


பெங்களூருவை சேர்ந்த அம்ருதா (எ) மஞ்சுளா (37) என்கிற பெண் கடந்த சில தினங் களுக்கு முன், “தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் மகள் நான் தான். 

என்னை அவரது ரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்ற த்தில் மனு தாக்கல் செய்தி ருந்தார். 

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதி மன்றத்தை அணுகு மாறு உத்தர விட்டது. 

எனவே அம்ருதா இன்னும் ஒரு சில தினங் களில் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்ப தாக தெரிகிறது.

இந்நிலை யில், டிடிவி. தினகரனின் ஆதரவா ளரான புகழேந்தி பெங்களூரு வில், ‘தி இந்து’ விடம் கூறிய தாவது:

கடந்த 13 ஆண்டு களுக்கு முன்பு ஷைலஜா என்கிற பெண்மணி என் வீட்டுக்கு வந்து, ‘நான் ஜெயலலிதா வின் தங்கை’ என கூறினார். 

அப்போது ஷைலஜா வுடன் திருமண மாகாத அவரது மகள் மஞ்சுளாவும் வந்திருந்தார். 

அந்த பெண் தான் இப்போது அம்ருதா என்கிற பெயரில் உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார். 

“ஜெயலலிதா வின் தங்கை என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? இருந்தால் நானே ஜெயலலிதா விடம் அழைத்துப் போகிறேன்” என ஷைலஜா விடம் பலமுறை சொல்லி யிருக்கிறேன். 

அவரிடம் எந்த ஆதாரமும் இல்லாத தால், ஆதாயத்துக் காக பொய் சொல்கிறார் என நினைத்தேன். 

பின்னர் ஒரு முறை சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு நச்சரித்தார்.

அதையும் நான் மறுத்ததால் ஷைலஜா நேரடியாக சென்னை க்கு சென்றார். அங்கு ஜெயலலிதா சென்று வரும் வழிகளில் எல்லாம் நின்று கொண்டு, தங்கை என சொல்லி இருக்கிறார். 

இதைக் கண்ட ஜெயலலிதா வின் உதவியாளர் பூங்குன்றன் அவரிடம் விசாரித்து போலீஸில் பிடித்து கொடுத்திருக் கிறார். 

போலீஸார் ஷைலஜாவை எச்சரித்து பெங்களூரு வுக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர். பின்னர் ஷைலஜா உடல்நலம் பாதிக்கப் பட்டு, இறந்த தாக கேள்விப் பட்டேன்.

இந்நிலை யில், ஜெயலலிதா வும் மறைந்த நிலையில் ஷைலஜா வின் மகளாக இருந்த மஞ்சுளா தனது பெயரை அம்ருதா என மாற்றிக் கொண்டு இருக்கிறார். 

மேலும் ஜெயலலிதா வின் மகள் நான்தான் என பிரதமரு க்கு கடிதம் போடுவதும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடு வதுமாக இருக்கிறார். 

அவருக்கு உடந்தை யாக ஜெயலலிதா வின் உறவினர் என்கிற போர்வையில் லலிதா என்பவர் நிறைய பொய்களை அள்ளி விடுகிறார். 

இதேபோல கீதா என்பவர் ஜெயலலிதா வின் தோழி என சொல்லிக் கொண்டு, அவரது பெயரை கெடுக்கிறார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது யாரும் இதை யெல்லாம் சொல்ல வில்லை. 

தற்போது எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், அவரது புகழுக்கு களங்கம் விளை விக்கும் விதமாக செயல்படு கின்றனர். 

எனக்கு தெரிந்த வரை அம்ருதா உச்ச நீதிமன்றம் செல்லும் அளவுக்கு விபரம் இல்லாதவர். 

அவருக்கு பின்னால் இருந்து யாரோ அவரை இயக்கிக் கொண்டிருக் கிறார்கள் என நினைக் கிறேன்.

ஜெயலலிதா வின் புகழுக்கு களங்கம் விளை விக்கும் விதமாக செயல்படும் அம்ருதா, லலிதா, கீதா உள்ளிட்டோர் மீது பெங்களூரு போலீஸில் இன்னும் ஓரிரு தினங்களில் புகார் அளிக்க இருக்கிறேன். 

அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்ற த்தில் வழக்கறிஞர் கிருஷ்ணப்பன் மூலமாக குற்றவியல் வழக்கு தொடுப்பேன். 

ஜெயலலிதா வின் நற்பெயரை கெடுக்கும் அனை வரையும் விரைவில் சிறைக்கு அனுப்புவேன். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

அம்ருதா எங்கே?

ஜெயலலிதா வின் மகள் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அம்ருதா டெல்லியில் இருந்து பெங்களூரு வில் உள்ள தனது வீட்டுக்கு இன்னும் வரவில்லை. 

கெங்கேரியில் உள்ள அவரது வீடு பூட்டியே இருக்கிறது. அம்ருதா வின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் இங்கே வரவில்லை என அக்கம் பக்கத்தில் இருப்ப வர்கள் சொல்கி றார்கள். 

இதனிடையே, தமிழக த்தைச் சேர்ந்த உளவுத் துறை அதிகாரிகள், அம்ருதா எங்கே? அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் என தீவிரமாக விசாரித்து வருகி ன்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings