நியூயார்க்கில் 5 மாடி குடியிருப்பில் தீ விபத்து !

0
அமெரிக்காவில் 5 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உட்பட 12 பேர் கருகி பலியானார்கள். 
அமெரிக்கா வின் நியூயார்க்கில் உள்ள பிரான்க்ஸ்சில் உயிரியல் பூங்கா அமைந் துள்ளது. இதற்கு எதிரே 5 மாடி கட்டிடம் உள்ளது. 

இதில், 25 குடியிருப்புகள் உள்ளன. உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.50 மணி யளவில் முதல் தளத்தில் தீப்பிடித்தது. 

அது மளமளவென அடுத்தடுத்த தளங் களுக்கும் பரவியதால் அங்கிரு ந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். தீ விபத்து குறித்து உடனடி யாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்தனர். 160 வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 

அதற்குள் இந்த தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 12 பேர் பரிதாப மாக கருகி பலியாகினர். மேலும், 12 பேர் காயங் களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். 
இவர்களில் 4 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. கட்டிடங் களில் வேறு யாரேனும் சிக்கி யுள்ளனரா என தீயணைப்பு துறையினர் தேடி வரு கின்றனர்.

விபத்து ஏற்பட்ட கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பிரான்க்சில் கடந்த 1987ம் ஆண்டுக்கு பின் 1990ம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் 87 பேர் உயிரிழந்தனர். 

இதுவே மோசமான தீ விபத்தாக கருதப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு பிரான்க்சில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு, இப்போது இந்த விபத்து நடந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings