ரவுடி வெட்டிக் கொலை... 3 பேருக்கு வலை !

0
வியாசர்பாடி பிவி.காலனி 12வது தெருவை சேர்ந்தவர் கொள்ளு கண்ணன் (28). பிரபல ரவுடி. இவரது மனைவி இந்துமாரி (25). தம்பதிக்கு சந்தானலட்சுமி (3), தினேஷ் (2) இரண்டு குழந்தைகள் உள்ளன.
ரவுடி வெட்டிக் கொலை... 3 பேருக்கு வலை !
கண்ணன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்கு கள் எம்.கே.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. 

இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மைக்கேல் (30) என்பவ ருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி தொழிலை கைவிட்டு கண்ணன் திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலை யில் நேற்று முன்தினம் நள்ளிரவு கண்ணன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது 3 பைக்கு களில் வந்த 5 பேர் கண்ணணை திடீரென மடக்கினர். 

பின்னர், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் கண்ணனுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். 

அவர் இறந்ததை உறுதி செய்த 5 பேரும், பைக்கில் தப்பிச் சென்றனர். தகவலறிந்து எம்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இது குறித்த புகாரின் பேரில் எம்.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி மைக்கேலின் கூட்டாளிகளான, அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (30), அருண் (33) இருவரையும் கைது செய்தனர். 

தலை மறைவாக உள்ள மைக்கேல், சதீஷ், கலைசெல்வன் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings