கனிமொழி உள்பட அனைவரும் விடுவிப்பு... 2ஜி தீர்ப்பு !

0
2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 
கனிமொழி உள்பட அனைவரும் விடுவிப்பு... 2ஜி தீர்ப்பு !
ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரை யும் வழக்கில் இருந்து விடுவித்தது. வழக்கில் நியாயமான சந்தேகங் களை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது, 

எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகிறார் கள் என நீதிமன்றம் கூறி உள்ளது. இதற்கிடையே தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யும் வலுத்து உள்ளது. 

இந்நிலையில் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுவதும் படித்த பின்னர் எங்களுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம் என சிபிஐ தெரிவித்தது.

சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிசேக் தயாள் பேசுகையில், நாங்கள் தீர்ப்பின் முழு விபரங்களையும் பெற வேண்டியது உள்ளது. 
நாங்கள் தீர்ப்பை முழுவதுமாக படிக்க வேண்டும், சட்ட ஆலோசனை களை பெறுவோம் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம் என்று கூறினார்.

இப்போது, 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பிற்கு எதிராக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என குறிப்பிட்டு உள்ளார் அபிசேக் தயாள்.

2ஜி வழக்கில், எங்கள் தரப்பில் முன் வைத்த ஆதாரங்களை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வில்லை என்று தெரிகிறது, எனவே உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ தரப்பு தெரிவித்து உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings