16 தொகுதிகளில் 200 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி !

0
182 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. 
16 தொகுதிகளில் 200 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்திலே வெற்றி !
இருப்பினும் எதிர்க் கட்சியான காங்கிரசும் கடும் போட்டியை கொடுத்து 80 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கி வலுவான எதிர்க் கட்சியாக உருவெடுத்து உள்ளது. 

மாநிலத்தில் 16 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 200 முதல் 2000 வாக்குகளாகவே இருந்து உள்ளது. 

இந்த தொகுதி களில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடுமை யான போட்டி நிலவி உள்ளது. டோக்லா மற்றும் பேத்புரா தொகுதி களில் மாநிலத்தில் சிறிய கட்சி களாக செயல்படும் தேசியவாத காங்கிரஸ் 

மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் முக்கிய மான வாக்குகளை பறித்து காங்கிர ஸின் வெற்றியை தடுத்து உள்ளது. சில தொகுதி களில் சுயேட்சை வேட்பாளர் களும் வாக்குகளை பிரித்து உள்ளனர்.
ஹிமாத்நகர், போர்பந்தர், விஜாபூர், தியோதர், தாங்ஸ், மான்சா மற்றும் கோத்ராவில் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவிஉள்ளது.

மேலும் பல்வேறு பகுதிகளில் சுயேட்சை வேட் பாளர்கள், எதிர்ப் பாளர்கள் என இரண்டு பெரிய கட்சிகளின் வாக்கை வெகுவாக பிரித்து உள்ளனர். 

கோத்ரா தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் சி. கே. ரால்ஜி 258 வாக்குகள் வித்தியா சத்தில் மட்டும் வெற்றி பெற்றார். 

8 தொகுதி களில் காங்கிரஸ் கட்சியின் வேட் பாளர்கள் 2000 ஓட்டு களுக்கும் குறைவான வித்தியா சத்திலே தோல்வியை தழுவி உள்ளனர். கோத்ரா வில் நோட்டோ விற்கு 3,050 வாக்களித்து உள்ளனர். 

சுயேட்சை ஒருவர் 18,000 வாக்குகளை பெற்று உள்ளார். டோல்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சி 327 வாக்குகள் வித்தியா சத்திலே தோல்வியை தழுவியது. 
இத்தொகுதி யில் பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முறையே 3139 மற்றும் 1198 வாக்கு களை பிரித்தது. 

பேத்புரா தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி 2,711 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி 2747 வாக்கு களை பெற்றது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings