கடலூரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு !

0
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே எரிந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட இளைஞர் உயிரி ழந்தார்.
உறவி னர்கள் உடலை வாங்க மறுத்ததால் பதற்றம் ஏற்பட்டு அங்கு போலீஸார் குவிக்கப் பட்டனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தா வட்டம் கிராம த்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் மகன் ஆனந்தன் (22). ஐடிஐ படித்து ள்ளார். 

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த துரை முருகன், வினோத் ஆகியோரும் கடந்த தீபாவளி அன்று, 

அதே பகுதியில் உள்ள மற்றொரு பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சிலம்பரசன், சோமசுந்தரம் ஆகியோரை தாக்கியதாக கூறப் படுகிறது.

இது குறித்து சிலம்பரசன் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய த்தில் புகார் அளித்து ள்ளார். இதனால் அவர்களு க்குள் முன் விரோதம் இருந்து வந்தது. 
இந்நிலை யில் கடந்த 26-ம் தேதி ஆனந்தன் சாத்தா வட்டம் பேருந்து நிலையம் பகுதியில் நின்றிருந்த போது, அங்கு வந்த சிலம்பரசன் உள்ளிட்ட சிலருடன் தகராறு ஏற்பட்டு அடிதடி யாக மாறி யுள்ளது. 

இதில் சிலம்பரசன் தரப்பினர் ஆனந்தனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்றிரவு ஆனந்தன் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்த நிலையில் 

சாத்தா வட்டம் பேருந்து நிலையம் அருகில் உயிருக்கு ஆபத் தான நிலையில் மீட்கப் பட்டார்.  

சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆனந்தன், சிலம்பரசன் உள்ளிட்ட சிலர் தன்னை தாக்கிய தாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத் தில் புகார் அளித்தார்.

இதை யடுத்து போலீஸார் சிலம்பரசன் (22), பூவரசன் (21) சுப்ரமணியன் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, மற்றவர் களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆனந்தன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். பின்னர் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நேற்று காலை உயிரி ழந்தார்.

இதை யடுத்து, அவரது உறவி னர்கள் உடலை வாங்க மறுத்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய த்தை முற்றுகை யிட்டனர். இதனால், சாத்தா வட்டம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings