கண்முன்னே கருகிய அக்கா - தங்கை கண்ணீர் பேட்டி | Sister die before her eye !

0
தமிழகத் தில் காதலன் செய்த வெறிச் செயலால் இளம் பெண் உயிரிழந்ததால் அப்பெண்ணின் தங்கை எங்கள் அக்காவை காப்பாற்ற 





எவ்வளவோ போராடி னோம் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்கு மூலம் அளித் துள்ளார்.


சென்னையின் ஆதம் பாக்கத்தில் இந்தூஜா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்த ஆகாஷ் என்ற இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டான்.

இதில் இந்துஜா உட்பட அவரின் தாயார் மற்றும் தங்கையும் சிக்கினர். இந்துஜா பரிதாப மாக வீட்டில் இறந்த நிலையில், தாயார் 

மற்றும் தங்கைக்கு சென்னை வனரக த்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து மருத்துவ மனையில் இருக்கும் இந்துஜா வின் தங்கை யான நிவேதா விடம் பொலிசார் வாக்கு மூலம் கேட்டுள்ளனர்.

அப்போது நிவேதா, சம்பவ தினத்தன்று இரவு எங்கள் வீட்டில் நான், இந்துஜா மற்றும் எனது அம்மா இருந் தோம். 

அப்போது 9 மணி அளவில் விட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதனால் அம்மா கதவை திறந்தார். 

அப்போது ஆகாஷ், இந்துஜா விடம் பேச வேண்டும் என்று கூறினார்.  அதன் பின் அவனை வீட்டிற்குள் அனு மதித்தோம். 

வீட்டின் சோபாவில் எனது அக்காவுடன் பேசிக் கொண் டிருந்த  ஆகாஷ் திடீரென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து அக்காவின் மீது ஊற்றினான். 

இதைக் கண்ட நானும் எனது அம்மாவும் தடுக்க முயற்சித்த மீது எங்கள் மீதும் ஊற்றி விட்டான்.

இதைத் தொடர்ந்து அவனை கீழே தள்ளி விட்டு விட்டோம், ஆனால் அவனோ சிகரெட் லைட்டரை பற்ற வைத்து விட்டான், இதில் எங்கள் 3 பேர் மீதும் தீ பரவியது.

இந்துஜாவை காப்பாற்ற நானும் அம்மாவும் போராடிய தால், நாங்களும் கருகி னோம், எங்கள் அலறல் சத்ததை கேட்டு கீழே இருந்த வர்கள் உடனடி யாக ஓடி வந்தனர். 

அவர்களை எல்லாம் ஆகாஷ் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி விட்டான். அதன் பின் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டது. 

தீயில் கருகிய எங்கள் அக்கா வீட்டிலே இறந்து விட்டாள்,  

அவளை காப்பாற்ற நாங்கள் எவ்வளவு போராடியும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என்று கண்ணீர் மல்க கூறி யுள்ளார்.

தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் வரும் தாய் மற்றும் நிவேதா இருவரும் உயிருக்கு போராடி வருவ தாகவும், தொடர்ந்து சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவ தாகவும் தெரிவிக் கப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)