பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதி !

0
மு.க. முத்து மகள் வழிப்பேரன் மனுரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதி !
உடல் நிலைக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த கருணாநிதி, எந்த நிகழ்ச்சி யிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். 

கடந்த வாரம் திடீரென சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு வைக்கப் பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வை யிட்டார். 

கருணாநிதியின் திடீர் வருகை, தி.மு.க தொண்டர் களுக்கு உற்சாக த்தைக் கொடுத்தது. 

இந்நிலையில், மு.க.முத்து மகள் வழிப்பேரனும் கருணாநிதியின் கொள்ளுப் பேரனுமான மனுரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் சென்னை கோபாலபுரத்தில் இன்று திருமணம் நடை பெற்றது. 

இந்தத் திருமண த்தை தி.மு.க தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். மணமக்கள் இருவரும் கருணாநிதி யின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 
திருமண த்துக்கு வந்திருந் தவர்களை கருணாநிதி பார்த்துக் கையசைத்து வரவேற்றார். ஓராண்டு ஓய்வு க்குப் பின்னர், இந்நிகழ்ச்சி யில் கருணாநிதி பங்கேற்றது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings