ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்... அரசின் கண்துடைப்பா?

0
தீபாவளியை யொட்டி ஆம்னி பேருந்து களில் அதிக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இணைய தளத்தில் வெளிப் படையாகவே கட்டணம் வசூலிக்கப் படுகிறது. 
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்... அரசின் கண்துடைப்பா?
அரசு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு என பயணிகள் புகார் தெரிவிக் கின்றனர். இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை வரும் 18-ம் தேதி கொண்டாடப் படுகிறது. 

இதற்காக சென்னை யில் இருந்து லட்சணக் கான மக்கள் சொந்த ஊரு க்குச் செல்வது வழக்கம். ரயில் களில் டிக்கெட் கிடைக் காத மக்கள் ஆம்னி பேருந்து களில் பயணம் செய்கி ன்றனர்.

ஆனால், வழக்க த்தை விட 50 முதல் 60 சதவீதம் வரையில் அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதால் பொது மக்கள் அவதிக்கு ஆளா கின்றனர்.

குறிப்பாக சென்னை – மதுரைக்கு ரூ.900 முதல் ரூ.1500 வரை யிலும், சென்னை – கோயம்புத்தூர் ரூ.1000 முதல் ரூ1,600 வரை யிலும், 
சென்னை – திருநெல்வேலிக்கு ரூ.1000 முதல் ரூ.1900 வரை யிலும் கட்டணம் வசூலிக்கப் பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக் குள்ளா கினர்.

இதுதொடர்பாக ஆம்னி பேருந்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாதாரண நாட்களைவிட பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. 

அதிக கட்டணம் வசூலிப்பு குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆனால், இணைய தளங்களில் வெளிப்படையாகவே அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

20 சதவீதம் அதிகம்
மற்றொரு தரப்பினரிடம் கேட்ட போது, நீண்ட தூரம் பயணம் செய்யும் போது அரசு பேருந்து களில் போதிய அளவு வசதிகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கிறோம். 

ஆனால் 10 முதல் 20 சதவிதம் அதிகமாக கட்டணம் வசூலித்து இடைத் தரகர்கள் டிக்கெட் விற்பனை செய்கின்றனர். 

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பண்டிகை நாட்களில் மட்டு மல்ல, வாரந்தோறும் இது நடக்கிறது என்றனர்.

போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்ட போது, போக்கு வரத்து விதிப்படி ஆம்னி பேருந்துகள் சுற்றுலா பேருந்துகளாக மட்டுமே இயக்க வேண்டும். 

அதாவது, ஒரு இடத்தில் பொது மக்களை ஏற்றிக் கொண்டு வேறொரு இடத்தில் தான் இறக்கி விட வேண்டும்.
ஆனால், தற்போது ஆம்னி பேருந் துகள் அரசு பேருந்துகளை போல் டிக்கெட் விற்பனை செய்து பயணி களை ஏற்றிச் செல்கின்றன. அதிக கட்டணம் வசூல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுத்து வரு கிறோம். 

இருப்பினும், இந்த பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு தான் ஆம்னி பேருந்து களுக்கு கட்டணம் நிர்ண யிக்க வேண்டும். 

இந்த கோரிக்கையை தமிழக அரசிடமும் வலியுறுத் தியுள்ளோம். என்றனர்.

அரசு அறிவிக்க வில்லை

அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு அறிவிக் கிறது. ஆம்னி பேருந்து களின் கட்டணம் என்ன என்பது பற்றி இதுவரை யாரு க்கும் தெரியாது. 
குறிப்பிட்ட தூரத்துக்கு இவ்வளவு என பேருந்து களின் தரத்துக்கு ஏற்ப கட்டண த்தை நிர்ண யித்து அரசு இதுவரை அறிவிக்க வில்லை. 

இதனால் தாங்கள் நிர்ணயித்தது தான் கட்டணம் என பேருந்துகள் வசூலிக் கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)