கல்லீரலில் கொழுப்பு படிதலும்... அதற்கான மூல காரணங்களும் !

கல்லீரலில் கொழுப்பு படிவு - Fatty Liver (steatosis) இதனை கொழுப்பு மிகு ஈரல் என்றும் அழைக்கலாம். 
கல்லீரலில் கொழுப்பு படிதலும்... அதற்கான மூல காரணங்களும் !
எம்மில் நிறையப் போருக்கு கல்லீரலில் கொழுப்பு படிவதைப் பற்றியும் அதன் பக்க விளைவுகள், எதனால் கொழுப்பு படிகிறது என்ற அலட்சிய அறிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக பாசி - எப்படி தான் வளரும் இடத்தையும் வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்து அது மெதுவாக வளரும், 
வளர்ந்து வருகையில் எந்த ஒரு தொல்லையும் இராது, நாம் சறுக்கி (வழுக்கி) விழுந்து கை, கால் என்பவற்றில் காயம் ஏற்பட்ட பின் தான் 

புத்தி வரும் பாசியை அகற்ற வேண்டும் என்று அது வரைக்கும் அன்றாடம் பாசி தெரிந்தும் தெரியாது போல் இருப்போம்.

அதே போலத்தான் கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு படிவானது எந்த வொரு அறிகுறிகளையும் காட்டாது. வளர்ந்து கொண்டிருக்கும் நன்றாக படிந்த பின் தான் அதன் குணத்தைக் காட்டும்.

கல்லீரலின் தொழிற்பாடு
கல்லீரலில் கொழுப்பு படிதலும்... அதற்கான மூல காரணங்களும் !
உண்ணும் உணவு, குடிக்கும் குடி வகைகள் என்பவற்றில் உள்ள நச்சுப் பாதார்த்தங்கள், கொழுப்பு என்பன நேரடியாக 

இரத்த ஓட்டத்தில் கலப்பதை பித்த நீருடன் சேர்ந்து ஒரு வடிதட்டாக செயல்பட்டு தடுக்கிறது. இதனால் மற்றைய அவயங்களும் பாதுகாக்கப் படுகின்றன.

கல்லீரலில் கொழுப்பு படிவினால் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள்
 • அடிக்கடி வயிறு ஊதுதல் (உப்பிசம்)
 • பசியின்மை
 • நிறை குறைதல் (உடல் உழைப்பின்றி, காரணமின்றி)
 • களைப்புத் தன்மை (சோர்வு)
 • மருத்துவம் தேவைப்படாத வயிற்று வலி (சாதுவான வலி)
 • உண்ட உணவு செமிக்க நீண்ட நேரம் எடுத்தல்.
 • அடி தொண்டையில் கசப்பு தன்மையை உணர்தல்.
50- 60 வயதைத் தாண்டினவர்கள் சற்று கவனமாக மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
கல்லீரலில் கொழுப்பு படிவிற்கான மூல காரணங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
கல்லீரலில் கொழுப்பு படிதலும்... அதற்கான மூல காரணங்களும் !
1 . மது இல்லாத கல்லீரல் கொழுப்பு படிவு

2 . மதுவினால் கல்லீரல் கொழுப்பு படிவு

மேலும்,

1 . அதிகமாக மது அருந்துதல் (Heavy alcoholism) அல்லது மது அருந்தாதவர்களும்

2 . நொறுக்குத் தீனிகள்.

3 . குழந்தைகள் அடிக்கடி விரும்பி சாப்பிடுகின்ற நொறுக்குத் தீனிகள்

4 . சில நஞ்சுப் பொருட்கள் உட்கொள்ளல் (Toxins).
 • சில உணவுகளில் ருசிக்காக சில இரசாயணங்கள் சேர்க்கப் படுகின்றவை
 • குளிர் பானங்கள் 
 • பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்
 • உணவுப் பொருள் கெடாமல் இருக்க பாவிக்கப்படும் சில இரசாயனங்கள்
5 . குறிப்பிட்ட மருந்து வகைகள் (Cretin drugs).
 • Aspirin
 • Steroids
 • Tamoxifen
 • Tetracycline
6 . இரத்தத்தில் கொழுப்பின் அளவு பரிந்துரைக்கப் பட்டதை விட அதிகமாக இருத்தல் (High blood Cholesterol).

7 . இரண்டாம் வகையான நீரழிவு (Type 2 Diabetic ).

8 . ஓரே இடத்தில் அதிக நேரமாக இருத்தல் (Obesity).

9 . வைரஸ். (ஹெப்பாடிட்டீஸ்)


11 . ஊட்டச் சத்து குறைபாடு (Malnutrition)

12 . அனுசேபப் பிணி (Metabolic Syndrome)
 • ஜீரண மண்டல பாதிப்பு
எப்படி கல்லீரல் கொழுப்பை கண்டுபிடிப்பது?
கல்லீரலில் கொழுப்பு படிதலும்... அதற்கான மூல காரணங்களும் !
1 . வைத்திய நிபுணர் - பார்த்து, கேட்டு, தொட்டுணர்ந்து நோய் நாடல் .(Physical examination)

2 . இரத்தப் பரிசோதனை (Blood Test)

3 . கழி ஒலி பரிசோதனை (Ultra sound)

4 .கல்லீரல் இழைய சோதனை (Liver Biopsy) 

கல்லீரல் கொழுப்புக்கான மருத்துவமும் தடுக்கும் முறைகளும்

1 . மதுபானத்தை கட்டுப்படுத்துதல் / தவிர்த்தல்.
 • எலுமிச்சை சாறு சேர்த்த நீரை பருகுதல்
 • திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடு
2  . இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கட்டுபடுத்தல்
 • வீட்டில் தயாரித்த உணவு
 • பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது
 • உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும்
 • உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3 . உடல் நிறையை குறைத்தல்
 • ஏரேபிக் நடனம் (Aerobic Dance)
 • ஓரளவு வேகமான நடை
4 . இரத்தத்தில் சக்கரையின் அளவை பராமரித்தல்
 • இளநீர், கரும்புச் சாறு அருந்துதல்.
 • பகுத்தறிந்து உண்ணல்
கல்லீரல் கொழுப்பானது ஆபத்து என்றாலும், படிப்படியாக குறைக்கலாம் எப்படி என்றால் ?
கல்லீரலில் கொழுப்பு படிதலும்... அதற்கான மூல காரணங்களும் !
உடல் பருமனைக் குறைக்கும் போது (உடற் பயிற்ச்சி, உணவு வகைகள்) , கல்லீரலில் உள்ள கொழுப்பானது தானாகவே கரைந்து விடும்.
அதாவது கலோரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள கொழுப்பு தானாகவே குறையும். எனவே இயற்கை முறையினால் உடல் பருமனைத் குறைத்தால் வெற்றி தான்
Tags: