பிலிப்பைன்ஸில் மூழ்கிய சரக்குக் கப்பல்... தேடும் பணி தீவிரம் !

0
பிலிப்பைன்ஸ் கடற் பகுதியில் கவிழ்ந்த துபாய் சரக்கு கப்பலில் பயணித்த 3 தமிழர்கள் உட்பட 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. 
பிலிப்பைன்ஸில் மூழ்கிய சரக்குக் கப்பல்... தேடும் பணி தீவிரம் !
'எமரால்டு கோல்டு' என்கிற துபாய் சரக்குக் கப்பல் இந்தோ னேஷியா வில் இருந்து களிமண் ஏற்றிக் கொண்டு சீனா செல்லும் போது பிலிப்பைன்ஸ் கடற் பரப்பில் கவிழ் ந்தது. 

இதில் 26 இந்தியப் பணி யாளர்கள் இருந்தனர். இவர்களில் 3 பேர் தமிழக த்தைச் சேர்ந்தவர்கள். 

தற்போது 16 பேர் மீட்கப் பட்டு விட்ட நிலையில் எஞ்சியுள்ள 10 பேரை தேடும் பணி நடை பெற்று வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. 

இந்திய அரசின் விமான ங்களும், கப்பல் களும் இந்த தேடுதல் பணியில் ஈடுபட் டுள்ளது. 

ஏற்கனவே மீட்கப் பட்ட 16 பேரில் 11 பேர் ஷியாமென் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட் டுள்ளனர். அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்தனர். 

மீட்கப் பட்ட 5 பேரை மணிலா வில் இருந்து இந்தியா விற்கு அழைத்து வர ஏற் பாடுகள் செய்யப் பட்டுள்ள தாகவும், தேடுதல் பணி விரைவில் முடி வடையும் என்றும் இந்திய வெளியறவுத் துறையின் 
செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ளார். 

இந்த சரக்குக் கப்பலில் அதிகாரி களாக பணிபுரிந்த வந்த தமிழக த்தைச் சேர்ந்த 3 பேர் பற்றி எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. 

கோவையைச் சேர்ந்த கிரிதர் குமார், புன்னைக் காயலைச் சேர்ந்த பெவின் தாமஸ் ஆகியோரை மீட்டுத் தரக் கோரி அவர்களது பெற்றோர் அந்தந்த மாவட்ட ஆட்சி யரிடம் புகார் மனு அளித்து ள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings