மைலேஜ் போதும்... ஃபோர்டு !

இந்தியாவில், கார் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலானோர் காரின் வேகத்தை விட, அந்தக் காரின் மைலேஜையே முக்கிய அம்சமாகக் கருது கிறார்கள்.
மைலேஜ் போதும்... ஃபோர்டு !
சமீபத்தில் ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியா வில் கார் வாங்க நினைப் பவர்களில் 10பேரில் 6பேர் அதிக மைலேஜ் தரும் கார் களையே வாங்க விரும்புகின்றனர். 

மேலும் இதில் 72% பேர் பெட்ரோல், டீசல் ஆகிய எரி பொருளுக்குச் செலவாகும் பணத்தை மிச்சப்படுத்த நினைக்கின்றனர் என்று இந்த ஆய்வில் தெரிய வருகிறது. 

எரி பொருளின் விலை மாற்றம் வாடிக்கை யாளர்களை அதிகமாக பாதிக்கின்றன. அதிலும் இந்த ஆய்வில் 60% பேர் அடுத்த 12 மாதங் களில் எரிபொருளின் விலை நிலையாக இருக்காது என்று கருதுகின்றனர். 

இதனால், அடுத்த 12 மாதங்களில் 56% இந்திய வாடிக்கை யாளர்கள் அதிக மைலேஜ் தரும் கார்களை வாங்கவே விரும்புவார்கள் என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

9,509 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 67% இந்திய வாடிக்கை யாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் காரின் வேகத்தைவிட காரின் மைலேஜை முக்கிய அம்சமாகக் கருதுகின்றனர்.
இணையத்தில் 1,023 பேரிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியர்கள் ஏன் அதிக மைலேஜ் தரும் கார்களை விரும்புகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, இந்திய வாடிக்கை யாளர்களில் மொத்தம் 72% பேர் அதிக மைலேஜ் தரும் கார்களை விரும்பு வதாகவும், மேலும் 71% பேர் அதிக மைலேஜ் தரும் கார்களே சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுகின்றனர். 

64% பேர் எரி பொருளின் விலை அதிகமாக உள்ள தால் அவர்கள் அதிக மைலேஜ் தரும் கார் களையே விரும்புகின்றனர். 

பெட்ரோல், டீசல் ஆகிய எரி பொருளின் விலை அதிகமாக இருப்பதால் இந்திய வாடிக்கை யாளர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது. 
40% இந்திய வாடிக்கை யாளர்கள் தங்க ளுடைய வாகனம் ஓட்டும் பழக்க த்தை மாற்றிக் கொள்வ தாகவும், 

37% பேர் அரசுப் போக்கு வரத்தை (பேருந்து) பயன்படுத்துவ தாகவும், 33% பேர் வாகனத்தை இயக்கு வதையே குறைக்க வுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings