கழிவறை மற்றும் குளியலறையைச் சுற்றி துர்நாற்றமா?

சிலரது வீடுகளில் கழிவறை மற்றும் குளியலறையைச் சுற்றி கடுமையான துர் நாற்றம் வீசும். என்ன தான் பினாயில் போட்டு கழுவினாலும், சிறிது நேரம் கழித்து மீண்டும் துர் நாற்றம் வீசத் தொடங்கும்.
கழிவறை மற்றும் குளியலறையைச் சுற்றி துர்நாற்றமா?
பலருக்கு இதை எப்படி தடுப்பது மற்றும் போக்குவது என்று தெரியாது. யாருக்குமே கழிவறை மற்றும் குளிய லறையை சுத்தம் செய்யப் பிடிக்காது தான். 

இருந்தாலும், வாரத்திற்கு ஒரு முறை அதனை சுத்தம் செய்தால் தான், துர் நாற்றம் வீசுவது தடுக்கப் படுவதோடு, கிருமி களால் உடல் ஆரோக் கியம் பாதிக்கப் படுவதைத் தடுக்க முடியும்.
இக்கட்டுரையில் வீடு மற்றும் கழிவறை, குளிய லறையில் வீசும் துர் நாற்ற த்தைத் தடுப்ப தற்கான மற்றும் அழகாக வைத்துக் கொள்வ தற்கான சில எளிய வழிகள் கொடுக்கப் பட்டுள் ளன.

ஷவர்

உங்கள் ஷவர் அசிங்க மாக உள்ளதா? அப்படி யெனில் ஷவரில் உள்ள அழுக்கு களைப் போக்க, ஆப்பிள் சீடர் வினிகர் உதவும். 

அதற்கு ஒரு பிளாஸ்டிக் கவரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி, அதனை ஷவரில் ரப்பர் பேண்ட் பயன் படுத்திக் கட்ட வேண்டும்.

முக்கியமாக இப்படி கட்டும் போது, ஆப்பிள் சீடர் வினிகரில் ஷவர் முழுமையாக மூழ்கி இருக்குமாறு செய்யுங்கள். பின் ஒரு மணி நேரம் கழித்து, அதனை தேய்த்துக் கழுவினால், ஷவர் பளிச்சென்று புதிது போன்று மின்னும்.

வாஷிங் மெஷின்
வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய ஓர் எளிய வழி யென்றால், வாஷிங் மெஷினில் சுடு நீரை நிரப்பி, அதில் 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து
வலிப்பு நோயை தீர்க்க !
சில நிமிடங்கள் ஓட வைத்து, பின் அணைத்து விட வேண்டும். 1 மணி நேரம் கழித்து மீண்டும் நன்கு வேகமாக ஓட வைத்து, நீரை வெளியேற்றி னால் வாஷிங் மெஷின் அழகாக புதிது போல் காட்சிய ளிக்கும்.

தரை மற்றும் டைல்ஸ்

தரை அசிங்கமாக கறையுடன் இருந்தால், 1/2 கப் பேக்கிங் சோடாவில், 1/4 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1 டீஸ்பூன் சோப்பு தூள் பயன்படுத்தி கலந்து, தரையில் ஊற்றி தேய்த்து கழுவ தரை பளிச்சென்று மாறும்.

பாத் டப் / குளியல் தொட்டி
கழிவறை மற்றும் குளியலறையைச் சுற்றி துர்நாற்றமா?
குளியல் தொட்டியில் உள்ள அழுக்கை முழுமையாக வெளியேற்ற, கிரேப் ஃபுரூட் மற்றும் கல் உப்பு பெரிதும் உதவியாக இருக்கும்.
அதற்கு கிரேப் ஃபுரூட்டை இரண்டாக வெட்டி, குளியல் தொட்டியில் உப்பைத் தூவி, பின் பாதி கிரேப் ஃபுரூட்டைக் கொண்டு தேய்த்து, பின் கழுவ வேண்டும்.

இதே முறையை காய்கறி வெட்டும் பலவையிலும் பயன் படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

சின்க் /  பாத்திரம்

கழுவும் தொட்டி நீங்கள் பாத்திரம் கழுவும் தொட்டியில் துரு பிடித்திருந்து, அதை நீக்க வேண்டு மானால், இம்முறை உதவியாக இருக்கும்.
மிதவை அணுமின் நிலையம் - ரஷியா !
அதற்கு எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் பைட்ரேட் சேர்த்து கலந்து, டூத் பிரஷ் கொண்டு தொட்டி யில் தேய்த்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

கழிவறை
உங்கள் கழி வறையை சுத்த மாக்குவ தற்கு நேச்சுரல் வழி வேண்டு மானால், எலுமிச்சை, பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த கலவை யால் சுத்தம் செய்யுங்கள்.

இதனால் கழிவறையில் உள்ள அழுக் ககள் நீங்குவ தோடு, கழிவறையும் துர்நாற்ற மின்றி இருக்கும்.
Tags: