கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் சேரமாட்டேன்... குஷ்பு !

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி அழைத்தாலும் சேர மாட்டேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கு வதாக அறிவித்துள்ளார். 
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் சேரமாட்டேன்... குஷ்பு !
அவரை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இன்று சென்னையில் நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

அத்துடன் கமல்ஹாசன் தமிழக ஆம் ஆத்மியின் முகமாவாரா? என்கிற யூகங்களும் எழுந்துள்ளன. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, 

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அழைத்தாலும் சேரப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிப்பேன் என்றார்.
Tags:
Privacy and cookie settings