தம்பி தங்கைகளே - நடிகர் விஷால் | Brothers & Sisters - Actor Vishal !

நீட் தேர்வு கொடு மையை வெல்ல முடி யாமல் தற்கொலை மூலம் மரண த்தைத் தழுவிய மாணவி அனிதா வுக்கு இரங்கல் செய்தி வெளி யிட்டுள்ள விஷால், 


ஒரு வேண்டு கோளை நடிகர் சங்கம், தயாரிப் பாளர் சங்கம் சார்பில் முன் வைத்துள் ளார்.

தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன். 

அனிதா தான் பாதிக்கப் பட்டது போல பிற மாணவ மாண விகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற் காக நீதிமன்ற படிக ளில் ஏறி போராடி யவர். 

நேற்று ஒரு வார இதழில் அனிதா பற்றி எழுதி யிருந் ததை படித்து மிகுந்த பெருமைப் பட்ட வனை இன்று வேதனைக் குள்ளாக்கி விட்டாள் அனிதா.

196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும் கூட அனிதா மருத்துவ படிப்பு க்கு தகுதி யடைய வில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. 

பதிலாக நாம் ஓட்டு போட்டு தேர்ந் தெடுத்த அரசியல் வாதிகள் நம்மை ஆள்வ தற்கு தகுதி யற்றவர் கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மக்கள் எல்லா வற்றையும் சகித்துக் கொள் வார்கள் அல்லது மறந்து விடுவார் கள் என்ற அல ட்சிய த்தில் இருக்கும் ஆட்சி யாளர்கள் திருந்த வேண்டும். 

இனி தமிழ் நாட்டு மாணவ மாண விகள் பாதிக் காத வகையில் எங்களுக் காக ஆட்சியா ளர்கள் சட்டம் இயற்ற வேண்டும்.

இப்படி நீட் தேர்வு குளறு படிகளால் பாதிக்கப் பட்ட, அனிதா வைப் போன்ற தம்பி தங்கை களுக்கு ஒரு கோரிக்கை. தயவு செய்து 

இது போன்ற தவறான முடிவு எடுக் காமல் என்னை போன்ற வர்களை ஒரு சகோத ரனாக நினைத்து அணு கினால் படிப்புக் குண்டான உதவி களை செய்துதர தயாராக இருக்கி றோம்.

- இவ்வாறு விஷால் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings