சாலை வளைவு ஒருபுறம் உயர்ந்திப்பதேன்?

ஒரு வட்டப் பாதையில் பயணிக்கும் ஒரு பொருள் மீது செயல்படும் இரண்டு விசைகள் குறித்து முதலில் பார்ப்போம்.
சாலை வளைவு உயர்ந்திப்பதேன்?
1. மைய விலக்கு விசை (Centrifugal Force)

2. மைய நோக்கு விசை (Centripetal Force)

நாம் ஒரு வாகன த்தில் வட்டப் பாதையில் பய ணிக்கும் போது நாம் வெளி நோக்கிப் பக்க வாட்டில் சாய்க்கப் படுகின் றோமே அது மைய விலக்கு விசை.

அதனைச் சமன் படுத்த, புவியின் ஈர்ப்பு நோக்கி எதிர்த் திசையில் வட்ட த்தின் உட் புறமாக நாமாகச் சாய்கி ன்றோமே அது மைய நோக்கு விசை.

இரு சக்கர வாகனத்தில் வளைவில் திரும்பும் பொழுது வளைவின் உட்புறமாக நம்மைச் சாய்த்துக் கொள்வோமே, இவ்விரு விசைகளை உணரலாம்.

ஒரு கல்லை கயிற்றில் கட்டி வட்டமாகச் சுற்றும் போதும் இவ்விரு விசைகளையும் நாம் உணரலாம். வட்டப் பாதையில் இருக்கும் கல்லானது மைய விலக்கு விசையினால் வெளி நோக்கிப் பயணிக்க முயல்வதை, கட்டியி ருக்கும் கயிறானது 

உள்நோக்கி இழுத்து சமமான மைய நோக்கு விசையை அளிப்ப தனால், அக்கல் தொடர்ந்து வட்டப் பாதை யிலேயே சென்று கொண்டி ருக்கும்.

இதில் மைய விலக்கு விசையின் சக்தி குறைந்தால் கல் வட்டத்தின் உள்ளே வந்து விழுந்து விடும். (அக்கல்லைச் சுற்று பவர் மண்டை உடைந்து விடலாம்) மைய நோக்கு விசை குறைந்தால், 
அதாவது கயிற்றின் பிடியை விட்டு விட்டால் வட்டப் பாதையில் சென்று கொண்டிருக்கும் கல்லானது நேர் பாதையில் பயணிக்கத் துவங்கி விடும். 

(வேறு யாராவது ஒருவர் மண்டை உடைந்து விடலாம்) எச்சரிக்கை தேவை. கிரகங்களின் சுற்றுக் கூட இதனடிப்படையில் இருப்பதாக நியூட்டன் கருதுகிறார். இதனை நியூட்டனின் பார்வை (Newtonian View) என்பர். 

ஐன்ஸ் டைனின் பார்வை வேறு விதமானது. சூரியன் போன்ற மகா பரும னுள்ள பொருள் தன்னைச் சுற்றியுள்ள வெளியையே வளைத்து விடும். 

அப்படி வளைந்திருக்கும் வெளியில் தான் கிரகங்கள் வேறு வழியின்றி சுற்றி வருவதாகக் கூறுகிறார். இது ஐன்ஸ்டைனின் பார்வை (Einsteinian View) என்பர்.

சரி, நாம் நம் கேள்விக்கு வருவோம். சமமான சாலையில் பயணிக்கும் வாகன மானது வளைவான ஒரு திருப்பத்தைக் கடக்கிறது என்றால் ஒரு வட்டப் பாதையை எடுக் கிறது என்று பொருள். வட்டப் பாதை யில் செல்லும் பொழுது செயல் படும்

மைய விலக்கு விசையினைச் சமன் படுத்தவே சாலையில் வெளிப்புறம் சற்று உயரமாக வைக்க ப்படுகின்றது. 
அதன் மூலம் வாகனத்தைச் சற்றுச் சாய்த்து வட்டத்தின் உட்புறமாக புவியீர்ப்பு நோக்கிய விசையான மைய நோக்கு விசை உருவாக்கப் படுகின்றது.

இது அந்த மைய விலக்கு விசைக்குச் சமமாக இருக்கும். எனவே, வாகனமானது வெளிப்புறம் தூக்கி யெறியப்படாமல் தொடர்ந்து சாலையிலேயே பயணிக்கும். 

இதில் இன்னும் சிலபல இயற்பியல் சமன்பாடுகள் அடங்கியுள்ளன. வாகனத்தின் நிறை முக்கியமில்லை, வாகனத்தின் வேகம், வளைவின் ஆரம் இவற்றைக் கருத்திற் கொண்டு வளைவுப் பாதையின் உயரம் எத்தனை பாகை இருக்க வேண்டும்

என்றெல் லாம் கணக் கிட்டு அவ்வளை வுப்பாதை யின் வெளிப் புற உயரம் அமைக் கப்படும். இதனை ஆங்கி லத்தில் Banked Curve என்பர்.
இதன் அடிப்படையிலேயே அந்தரத்தில் விமானத்தைத் இட வலமாகத் திருப்புவதும் சாத்திய மாகின்றது.

கேளிக்கைப் பொருட்காட்சிகளில் மரணக்கிணறு என்றொரு காட்சி இருக்குமே. உயிரைப் பணயம் வைத்து விளையாடும் அவ் வீரர்கள் இயற்கை யின் இவ்விரு விசைகளை நன்கு கையாளத் தெரிந்தவர்கள்.
Tags: