ஃபைன் போடுவேன்... எச்சரித்த கலெக்டர் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநராட்சி சார்பாக டெங்கு விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தப் பட்டது. துப்புரவு பணியாளர்கள் மூலம் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சுத்தம் செய்யப் பட்டது. 
ஃபைன் போடுவேன்... எச்சரித்த கலெக்டர் !
அவர்க ளோடு இணைந்து மாவட்ட ஆட்சியர் வீரராக வராவும் ஆட்சியர் அலுவல கத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடு பட்டார். 

அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவ லகங்களுக்கும் அவர் சென்றார். அப்போது, அலுவலக ஜன்னல் பகுதி யின் வெளியே பேப்பர் டீ கப்புகள் அதிக அளவு கிடந்தது. 

அதைத் தன் கையால் எடுத்து சுத்தம் செய்த ஆட்சியர், ’இங்கு பொது மக்கள் குப்பைகள் போட வாய்ப்பில்லை. இங்கு வேலை செய்யும் அதி காரிகள் தான் குப்பைகள் கீழே போட்டிருக்க முடியும். 

குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுங்கள். இல்லை யென்றால் உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டியது வரும்’ என எச்சரித்தார். 
அதன் தொடர்ச்சியாக சுத்தம் செய்யும் பணியை மேற் கொண்டார் . மேலும், பொது மக்களி டையே டெங்கு குறித்த விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தார்.

மாவட்ட ஆட்சியர், பணியா ளர்களுடன் இணைந்து குப்பையை அகற்றிய காட்சியை பொது மக்கள் வியப்புடன் பார்த்த படியே கடந்து சென்றனர்.
Tags:
Privacy and cookie settings