நீட் முடிவால் கொதிக்கும் திருநங்கைகள் !

நீட் தேர்வில் திருநங்கைகள் ஐந்து பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வெளியான அரசு அறிவிப்பில் சந்தேகம் உள்ளதாகத் திருநங்கைகள் போர்க் கொடி தூக்கி யுள்ளனர்.
நீட் முடிவால் கொதிக்கும் திருநங்கைகள் !
நீட் முடிவுகள்

நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 4-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதி மன்றம் உத்தர விட்டது. 

இதையடுத்து, மருத்துவக் கலந்தாய்வுக் கான பணிகளைச் சுகாதாரத் துறை தீவிரப் படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, நேற்று மருத்துவக் கலந் தாய்வுக்கான ரேங்க் பட்டியல் சென்னையில் வெளியிடப் பட்டது. 

நீட் தேர்வு முடிவுகள் பட்டியலில் நீட் தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள், தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்வானவர்களின் பட்டியல், ஆண், பெண், திருநங்கைகள் எனப் பிரிக்கப்பட்டு வெளியிடப் பட்டது. 

இதில் திருநங்கை களுக்கான பிரிவில் 8 திருநங்கைகள் தேர்வு க்கு விண்ணப் பித்து எழுதியதாகவும், அதில் ஐந்து பேர் தேர்ச்சி அடைந்து ள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கிரேஸ் பானுநீட் முடிவுகளில் குறிப்பிடப் பட்டது போல் தேர்வான அந்த ஐந்து திரு நங்கைகள் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் 

எனத் திரு நங்கைகள் கோரி க்கை எழுப்பி யுள்ளனர். இது குறித்து திரு நங்கை உரிமை களுக்கான ஆர்வலர் கிரேஸ் பானு கூறுகையில், 

நீட் தேர்வில் ஐந்து திருநங்கைகள் தேர்வாகி யுள்ளதாக முடிவுகள் பட்டியல் அரசின் சார்பில் வெளியிடப் பட்டுள்ளது.
நீட் முடிவால் கொதிக்கும் திருநங்கைகள் !
திரு நங்கைகள் தேசிய அளவிலான ஒரு தேர்வில் தேர்வாகி யிருப்பது பெருமைக் குரிய விஷயமே. 

ஆனால், தேர்வான அந்த ஐந்து திரு நங்கைகளின் விவரங்கள் குறித்து இது வரையில் அரசு வெளியிடாமல் இருப்பது நீட் முடிவுகள் பட்டியலின் மேல் உள்ள உண்மைத் தன்மையைக் கேள்விக் குறியாக்கி யுள்ளது.

அவ்வாறு ஐந்து திருநங்கைகள் தேர்வாகி யிருந்தால் முதலில் அரசு அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும். 

இதே போல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் ஒரு திருநங்கை தேர்வாகி யுள்ளார் எனப் பெருமையாக அறிவிப்பு வெளி யிட்டனர். 

ஆனால், அதன் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, அப்படி எந்த வொரு திரு நங்கையும் தேர்வாக வில்லை என்ற உண்மை தெரிய வந்தது. 

அந்த வேளாண் சேர்க்கை இடம் வேறொருவரால் நிர்வாகத்தால் நிரப்பப் பட்டிருந்தது. 
இதே நிலை நீட் தேர்விலும் திருநங்கை என்ற மேற்கோ ளுடன் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே எங்களின் தற்போதைய வேண்டு கோள் என்றார்.

மேலும், நீட் தேர்வு முடிவு களில் வெளி யிடப் பட்டுள்ள வாறு ஐந்து திருநங்கை கள் தேர்வாகி யுள்ளனரா என்பது குறித்து அறிய தகவல் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பி யுள்ளார் கிரேஸ் பானு என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings