என்னை காப்பாற்று என்று மகனுக்கு போன் செய்தவர் !

காட் கோபரில் இடிந்து விழுந்து உயிர்களை பலி கொண்ட சாய்தர்‌ஷன் கட்டிடத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் தோஷி (வயது57). 
என்னை காப்பாற்று என்று மகனுக்கு போன் செய்தவர் !
கட்டிடம் இடிந்த போது அவரும் இடிபாட்டிற்குள் சிக்கிக் கொண்டார். அவரது நிலைமை என்ன வானதோ என அவரது குடும்பத்தினர் கதறி அழுதபடி இருந்தனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாலை 6 மணியளவில் ராஜேஷ் தோஷி செல்போன் எண்ணில் இருந்து அவரது மகனுக்கு அழைப்பு வந்தது.

இதை பார்த்து திகைப் படைந்த அவரது மகன் அழை ப்பை ஏற்று பேசினார். அப்போது ராஜேஷ் தோஷி தான் இடி பாட்டிற் குள் சிக்கி வேதனை யில் துடித்துக் கொண்டி ருப்பதாக வும், 

தன்னை காப்பாற்றும் படியும் கூறினார். உடனே இது பற்றி அவர் தீயணைப்பு படையினரிடம் தெரிவித்தார்.
அவரது செல்போன் அலாரம் மூலம் அவர் சிக்கி இருக்கும் இடத்தை தீயணைப்பு படையினர் கண்டு பிடித்தனர். இருப்பினும் அவரை நெருங்கு வதற்கு நள்ளிர வாகி விட்டது.

கொஞ்சம், கொஞ்சமாக இடிபாடுகளை அகற்றி நள்ளிரவு 1 மணிக்கு பின்னர் அவரது முக த்தை பார்த்தனர். 

மிகவும் சோர் வுடன் கிடந்த அவருக்கு குடிப்ப தற்கு தண்ணீர் மற்றும் எலுமிச்சை பழச் சாறு கொடுக்கப் பட்டது.

இந்த நிலையில், விபத்து நடந்து 16 மணி நேரத்திற்கு பிறகு ராஜேஷ் தோஷி இடி பாட்டிற்குள் இருந்து பத்திர மாக வெளியே மீட்கப்பட்டார். 
உடனே அவர் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் தேறியிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு செல்போன் மூலம் மறுவாழ்வு கிடைத்து இருப்பதாக அவரது குடும்ப த்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings