மோடியை கிண்டலடித்து புகைப்படம்... போலீஸ் வழக்கு !

ட்விட்டர் சமூக வலை தளத்தில் பிரதமர் மோடியைக் கிண்டல் செய்து புகைப் படத்தை வெளியிட்டது தொடர்பாக ஆல் இந்தியா பேக்கார்டு (ஏஐபி) எனும் 
மோடியை கிண்டலடித்து புகைப்படம்... போலீஸ் வழக்கு !

சமூக வலைதள பொழுதுபோக்கு சேனல் மீது மும்பை போலீஸார் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


பிரபல சமூக வலை தளமான ட்விட்டரில் நேற்று முன் தினம் பிரதமர் மோடியைக் கிண்டலடித்து ஒரு புகைப்படம் வெளியானது. 

ஒரு ரயில்வே நிலையத்தில் கைப்பையை மாட்டிக் கொண்டு, கையில் செல்போன் வைத்துக் கொண்டு மோடி இருப்பது போல் அந்தப் புகைப் படம் இருந்தது.

ரயிலுக்காக அவர் காத்திருப்பது போன்ற அந்தப் படம், மோடியின் வெளிநாட்டு பயணத்தை கிண்டல டிக்கும் பாணியில் இருந்தது. 

அவரது உண்மையான புகைப் படத்தில் ‘ஸ்நாப் ஷாட்ஸ் டாக் பில்டர்’ எனும் ஆப் பயன் படுத்தப்ப ட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


பொதுவாக இந்த ஆப்- நமது புகைப் படங்களில் நாயின் மூக்கு, காது, நாக்கு போன்றவை ஸ்பெஷல் எபெக்ட்ஸ் முறையில் சேர்க்க பயன் படுவது ஆகும். 

இந்தப் புகைப் படம் வெளியிடப் பட்ட சில மணி நேரங் களில் பல லட்சம் பேர் இதனைத் பார்த் துள்ளனர். பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவி த்தனர்.

இந்நிலை யில் இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ‘ட்விட்டர்’ பயன் பாட்டாளர் ரீதேஷ் மகேஸ்வரி போலீஸில் புகார் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்துவ தற்காக அந்தப் புகைப்படம் சைபர் கிரைம் போலீஸா ருக்கு அனுப் பப்பட் டுள்ளது. 


மேலும் பிரதமர் மோடியைக் கிண்ட லடிக்கும் வகையில் புகைப் படத்தை பதிவிட்ட ‘ஆல் இந்தியா பேக்கார்டு’ (ஏஐபி) சேனLல் மீது போலீஸார் அவதூறு 

மற்றும் மின்னணு முறையில் அசாதாரண முறையில் தகவல் வெளி யிடுவது போன்ற பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மும்பை துணைக்காவல் ஆணையாளர் ரேஷ்மி காரந்திகர் கூறும் போது, சட்டப்பூர்வ ஆலோசனைகளுக்குப் பிறகு ஏஐபி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது’ என்றார். 


இது தொடர் பாக ஏஐபி-யின் நிறுவனர்களில் ஒருவரான தான்மே பட் மற்றும் ரோகன் ஜோஷி ஆகியோரைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் பதில் கூற மறுத்து விட்டனர்.

ஏஐபி- ஆன்லைன் சேனலானது கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 

அரசியல், சினிமா உள்ளிட்ட துறைகளில் பிரபலங்களைக் கிண்டல் செய்து பிரபலமானது இந்த சேனல் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings