மூட்டைப் பூச்சிக்கு பிடித்த நிறம் என்ன? தெரியுமா?

உங்கள் கட்டிலை சுற்றிலும் மூட்டைப்பூச்சி அட்டகாசம் இருந்தால் எப்படி இருக்கும் . கண்டிப்பாக அதற்கு அப்புறம் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது அல்லவா. 
இந்த வகை பூச்சிகள் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் குடும்பத்தை சார்ந்தவை. இது பார்ப்பதற்கு நல்ல நீள் வட்ட வடிவில் சிறிய அளவில் பிரவுன் கலரில் காணப்படும். 

இதன் ஓரே உணவு நமது இரத்தம் மட்டுமே. பொதுவாக காணப்படும் மூட்டைப் பூச்சிகள் சிமெஷ் லாக்டுலாரிஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி தனது பசியை நிவர்த்தி செய்து கொள்கிறது. மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்ட றிந்துள்ளனர். 
மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள் வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்று தெரிய வந்து ள்ளது. வெவ்வேறு வர்ணங்களிலான,

மூட்டைப் பூச்சியின் அளவி லான சிறிய கூடாரங்கள் இருந்த பெட்டகம் ஒன்றுக்குள் மூட்டைப் பூச்சிகள் அனுப்பப் பட்டுள்ளன.

மிகவும் அடர்த்தியான நிறங்களையே அந்த மூட்டைப்பூச்சி கள் தேடிச் சென் றுள்ளன.

இந்தக் கண்டு பிடிப்பின் மூலம், மூட்டைப்பூச்சி களை ஒழிப் பதற்கான சிறந்த வழிகளை கண்டறிய முடியும் என்று நம்பப்படுகின்றது.
துணிகளிலும், படுக்கைகளிலும், சுவரின் துளைகளிலும், மரப் பொருட்களின் இடுக்குகளிலும் ஒட்டிக் கொண்டு வாழும் இந்த மூட்டைப் பூச்சிகள்,

சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களை தவறுதலாக சக மூட்டைப் பூச்சிகள் என்று நினைத்து விடுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Tags: