பிக்பாஸ்... கமல் வீட்டருகே போராட்டம் !

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமலின் வீட்டின் அருகாமையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் இருந்தனர்.
பிக்பாஸ்... கமல் வீட்டருகே போராட்டம் !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தமிழர் பாரம்பரியம் மற்றும் தமிழ்ச் சமூகத்தை கெடுக்கும் வகையில் உள்ளது என்று பிக்பாஸ் 

நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு இந்து மக்கள் கட்சியினர் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக் கிழமை) இந்து மக்கள் கட்சியினர் ஆழ்வார் பேட்டையிலுள்ள கமலின் வீடு அமைந்துள்ள பகுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மக்கள் கட்சியினர் கமலின் வீட்டை முற்றுகையிடவுள்ள தாக போலீஸாருக்கு முன்னரே தகவல் கிடைத்ததால் கமல் வீட்டின் மூன் பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப் பட்டிருந்தது. 

இதனால் வீட்டின் முன் போராட்டம் நடத்தாமல் வீடு அமைந்துள்ள பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:
Privacy and cookie settings