டாட்டூஸ் உயிரை வாங்குமா?

ஆண்களும் பெண்களும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அதில் தற்போது டாட்டூஸ் போடுவது மிகவும் பிரபலமாக உள்ளது. 
ஆண்கள் பெண்கள் என இருபாலரும் டாட்டூஸ் போடுவதை விரும்பு கின்றனர். இதில் இரண்டு வகை உண்டு பர்மனென்ட் மற்றும் டெம்ரவரி. பெர்மனென்ட் டாட்டூஸ், 

வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும். டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் அழிந்து விடும். அனை வருக்கும் விருப்பமான இந்த டாட்டூஸ் போடுவ தால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது என்பதை பற்றி காண்போம்.
டாட்டூஸ்..! ஊசி போன்ற ஒரு கருவியில் ரசாயண மை நிரப்பி, உடலில் வரைவதே ‘டாட்டூஸ்’. இதை பல வண்ணங் களிலும், பல வடிவங் களிலும் போட்டுக் கொள்ளலாம். 

பர்மனென்ட் டாட்டூஸ் வாழ்நாள் முழுவதும் உடலில் நிலைத் திருக்க போவதால், யோசித்து தேர்வு செய்வது அவசியம்.

தரமான இங்க் டெம்ரவரி டாட்டூஸ் போடுவதால் வலிகள் ஏற்படுவதில்லை. ஆனால் பர்மனென்டாக போடும் போது கட்டாயம் வலி இருக்கும். 

டாட்டூஸ் போட்ட பின் அந்த இடத்தில் பத்து நாட்களுக்கு அரிக்கும். தரமான நிபுணர்களிடம் போட்டால் அவர்கள் நல்ல இங்க் பயன்படுத்து வார்கள். 

அது மட்டு மின்றி உங்களது சருமத் திற்கு எந்தவித இங்க் பொருந்தும் என்பதை அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக அறிந்தி ருப்பார்கள்.

கவனம் தேவை பர்மனென்ட் டாட்டூஸ் போட்ட இடத்தில் 20 நாட்களுக்கு சூரிய ஒளி படமால் பார்த்துக் கொள்ள வேண்டும். டாட்டூஸ் மீது தண்ணீர் படலாம். 

ஆனால் சோப்பு போன்ற எந்த வித கெமிக்கல்களும் படக்கூடாது. தேங்காய் எண்ணெய் போடுவது மற்றும் நேரடியாக ஷவர்பாத் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தேவதையின் வரம்... வல்லவர் யார் ?

இறந்த செல்கள் டாட்டூஸ் போட்ட இடத்தில் உள்ள இறந்த செல்கள் பத்து நாட்களில் தானாக உறிந்து விடும். அதற்கு முன் நீங்கள் அதை எதுவும் செய்யக் கூடாது.

உடல் உழைப்பு வேண்டாம் டாட்டூஸ் போட்ட கைகளுக்கு அதிக உடல் உழைப்பு இருக்க கூடாது. ஜிம்மிற்கு போவது, நீச்சல் அடிப்பது போன்றவை வேண்டாம்

எய்ட்ஸ் பாதிப்பு டாட்டூஸ் போடுவதால் இரத்தம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. எய்ட்ஸ் உள்ள ஒருவருக்கு பயன் படுத்தும் 

ஊசிகளை உங்களுக்கு பயன் படுத்தினால், எய்ட்ஸ் பரவும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுத்தமற்ற ஊசிகள் தரமற்ற டாட்டூஸ் போடும் இடங்களுக்கு சென்று டாட்டூஸ் போடுவது நிச்சயம் தவிர்க்கபட வேண்டியது அவசியம். 

அங்கே சுத்த மற்ற ஊசிகளை அவர்கள் பயன்படுத்தினால், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம்.

நிபுணர்கள் அவசியம் டாட்டூஸ் போடுவது ஆரோக்கி யத்துடனும் சம்பந்தபட்டது. எனவே தரமான இடங்கள் மற்றும் நல்ல நிபுணர்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இதனால் தீங்கு இல்லை தற்காலிக டாட்டூஸ்கள் காய்கறிகளின் சாறுகளில் இருந்து கிடைக்கும் நிறங்களால் போடப்படுவதால், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது
Tags:
Privacy and cookie settings