உள்ளாடை அணிந்து நிகழ்ச்சி நடத்த வேண்டியது தானே !

பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொது வெளியில் விமர்சிப்பது ஆணா திக்க சமுதாயத்தின் வழக்கம். 'பொது இடங் களில் பெண்கள் ‘நாகரிக மான’ உடைகள் அணிய வேண்டும்; 

உள்ளாடை அணிந்து நிகழ்ச்சி நடத்த வேண்டியது தானே !
லெக்கிங்ஸ் அணியக் கூடாது' என்பது போன்ற பல அறிவுரை களை அள்ளி வழங்கு வார்கள். ஆடை களோடு சம்பந்தப் படுத்தி நடத்தை யைக் கேலி செய்யும் ‘ட்ரோல்’ கலாசாரம், இன்று பரவலாகி வருகிறது. 

நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படை யில் இணைய த்தில் ’ட்ரோல்’ செய்யப் படுவது குறித்து சமீபத்தில் 'மிரர் நெள' என்ற ஒரு தனியார் தொலைக் காட்சியில் விவாதம் நடத்தப் பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது நடிகை பிரியங்கா சோப்ரா அணிந் திருந்த ஆடை, ஒரு பத்திரிகைக் காக 

தீபிகா படுகோன் கொடுத்த போஸ், டென்னிஸ் விளையாடும் போது சானியா மிர்சா வின் உள்ளாடை தெரியும் ஒரு புகைப் படத்தை பிரபல இயக்குநர் ஒருவர் ’ஷேர்’ செய்தது, 
ரம்ஜான் பண்டிகை யன்று இந்தி நடிகை சனா பாத்திமா நீச்சல் உடையில் அளித்த போஸ் ஆகியவை ‘ட்ரோல்’ செய்யப் பட்டது குறித்து அந்த நிகழ்ச்சி யில் விவாதிக்கப் பட்டன. 

அந்த நிகழ்ச்சி யின் தொகுப் பாளராக ஃபயே டிசெளசா (Faye D'souza) என்ற பெண் இருந்தார். 

விவாத த்தில் பங்கேற்ற இஸ்லாமிய மதகுரு வான மெளலானா யாசூப் அபாஸ் (Maulana Yasoob Abbas) என்பவர், “பெண்கள் நாகரிக மான உடை களை அணிய வேண்டும்” என்ற பாணி யில் பேசினார். 

இந்தக் கருத்தை வலியு றுத்தும் போது, ”நீ உள்ளாடை அணிந்து கொண்டு வந்து விவாதம் செய். ஆண் களுக்கு நிகராகி விடுவாய். சமத்துவம் ஏற்பட்டு விடும்" என்று குத்தலாகச் சொன்னார். 

இந்த வார்த்தை களை அவர் மீண்டும் மீண்டும் கூறிக் கொண் டிருக்க, அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க தயாரானார் ஃபயே டிசெளசா.

விவாத த்தில் பங்கேற்ற மற்றவர் களை அமைதி யாக இருக்கு மாறு சொன்ன ஃபயே டிசெளசா, கேமரா வைப் பார்த்துப் பேசத் தொடங் கினார். ”அவர் கூறிய கருத் தால் நான் ஆவேசம் அடைவேன் என்று அவர் நம்புகிறார். 

நான் என் நிலை தடுமாறி, என் வேலையைச் செய்ய மறந்து விடுவேன் என நம்புகிறார்'' என்றவர், 

''நான் உங்களை மாதிரி பலரையும் பார்த்தி ருக்கிறேன் மெளலானா ஜி. உங்களைப் பார்த்து நான் பயப்பட வில்லை. 
உங்கள் கருத்தால் நான் அதிர்ந்து போக வில்லை. சனா ஃபாத்திமா, சானியா மிர்சா மற்றும் பல பெண்கள் தங்கள் வேலையைச் செய்கி றார்கள். 

அவர்களின் உடை களையும் அவர்க ளையும் விமர்சித் தால், நடுங்கிப் போய் சமையலறைக்குள் ஓடி விடுவார்கள் என நினைக்கும் ஆண் களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்பு கிறேன். 

இந்த உலகில் நீங்கள் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம். நாங்கள் எங்கும் ஓடி விட மாட்டோம்” என்று தீர்க்கமான குரலில் சொன்னார்.

அதன் பிறகும் தன் நிலைப் பாட்டுக்கு நியாயம் சேர்க்க முயற்சி செய்தார் மெளலானா. ஆனால், அது எடுபட வில்லை. 

தான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதைத் தீர்மா னிக்க ஒவ்வொரு பெண்ணு க்கும் உரிமை உண்டு. 
பெண்கள் அணியும் ஆடை களை மையப் படுத்தி அவர்களை ‘ட்ரோல்’ செய்து, அவமதிக்க நினைக்கும் ஆண் களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமை யட்டும். 
ஃபயே டிசெளசா போல ஒவ்வொரு பெண்ணி டமும் இந்தத் தைரியமும் நிதான மும் இருந்தால், ’சமூகக் காவலர்கள்’ போடும் கூச்சல் கரைந்து போய் விடும்.
Tags:
Privacy and cookie settings