கேரள மாநிலம் வயனாடு மாவட்டத்தில் இருக்கும் அழகான குட்டி கிராமம் தான் மீனாங்கடி. திரும்பும் திசை எங்கும் பசுமை போர்த்திய மலைகளும் அதில் முளைத்துக் கிடக்கும் மரங்களுமாக ரம்மிய தோற்றம் கொண்ட பகுதி. 
செய்ய நினைத்ததை செய்த கேரள கிராமம் !
இந்தியா வின் முதல் கார்பன் நடு நிலையை (CARBON NEUTRALITY) தன்ன கத்தே கொண்டி ருக்கும் கிராமம் என்ற பெருமையை தற்போது மீனாங்கடி கிராமம் பெற்றி ருக்கிறது.

குளோபல் வார்மிங் பற்றிய பாரிஸ் ஒப்பந்த த்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரெம்ப் வெளி யேறியுள்ள இந்தச் சூழலில், நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா? என்று 
போட்டி போட்டுக் கொண்டு கார்பன் - டை - ஆக்ஸைடை வெளியிடும் வல்லரசு நாடுகளுக்கு மத்தியில், கார்பன் வெளியீட்டை எப்படி தடுப்பது என உலக நாடுகள் மாதம் தோறும் 

மீட்டிங் மட்டுமே போட்டு பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மீனாங்கடி கிராம த்தை பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கார்பன் நடுநிலை:

ஒரு குறிப் பிட்ட பகுதியில், பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்க ப்படும் கார்பன் – டை - ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோ புளூரோ கார்பன் போன்றவை வெளி யாகும் 

அளவு கணக்கி டப்பட்டு கார்பன் நடுநிலை கணிக் கப்படும். அந்த வகையில், மீனாங்கடி கிராமத்தில் பூஜ்ஜிய சதவீத கார்பன் வெளியீடு கண்ட றியப்பட் டுள்ளது. 

அதாவது, இயற்கை சமநிலை க்கு அதிக மாகவோ, குறை வாகவோ கார்பனை வெளி யிடாத ஒரு அற்புதமான பகுதியாக மீனாங்கடி கிராமம் அடை யாளப் படுத்தப் பட்டிருக் கிறது. இது எப்படி சாத்திய மானது ?
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார த்தில் காட்சி கொடுக்கும் இந்த அழகிய கிராமம், ஒரே நாளில் இந்த நிலைக்கு வந்து விட வில்லை. 
அந்தக் கிராம த்தைச் சேர்ந்த அனை வரும் இணைந்து, பல வருடங் களாக தங்கள் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வழியில் கட்ட மைத்திருக் கிறார்கள். 

அதன் ஒரு பகுதி தான் 'கார்பன் நடுநிலை' என்ற இலக்கு. அதன்படி கடந்த வருடம் சுற்றுச் சூழல் தினமான ஜூன் 5, 2016ல் கிராம சபை கூட்டப் பட்டு, 'நம் கிராம த்தை கார்பன் நடுநிலைக் கிராமமாக மாற்ற வேண்டும்' 

என்று தீர்மானம் நிறை வேற்றினர். தீர்மான த்தோடு நின்று விடாமல் அதற்காக அவர்கள் காட்டிய வேகம் அளப்பறியது.

கிராம த்தில் யாரும் ரசாயன செயற்கை உரங்களை பயன் படுத்தக் கூடாது என்று முதலில் முடி வெடுத் தார்கள். அதன்படி `அட்டகொல்லி` என்ற பெயரில் இயற்கை வேளாண் பூங்காவை உருவாக் கினார்கள். 

அதில் இயற்கை உரங் களை மட்டுமே பயன் படுத்தி காய் கனிகள் விளை விக்கப் பட்டு கிராம மக்க ளுக்கு வழங்கப் பட்டது. 

உணவு முறையை சரி செய்த கிராம மக்களின் பார்வை அடுத்த தாக வனத்தின் பக்கம் திரும்பியது. 
செய்ய நினைத்ததை செய்த கேரள கிராமம் !
கிராம பஞ்சாயத்து, உள்ளூர் தேவஸ் தான போர்டு, சமூக வனத்துறை ஆகியவற்றை ஒருங்கி ணைத்து புனிதக் காடு என்ற பெயரில் 

ஒரு திட்டத்தை கொண்டு வந்து சுமார் 38 ஏக்கர் வன நிலத்தை கையகப் படுத்தி அதில் உள்ள மரங்களை பாதுகாத்தது மட்டு மல்லாமல், பல்வேறு வகையான மரக்கன்று களையும் வனத்திற்குள் நடவு செய்தனர்.

ஊரைச் சுற்றி இருக்கும் அனைத்து குளங்களும் தூர் வாரப்பட்டன. பல புதிய குளங்களும் வெட்டப்பட்டன. 
தற்போது அந்தக் கிராமத்தை சுற்றி சிறியதும் பெரியதுமாக சுமார் 456 குளங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான வற்றில் மீன்கள் வளர்க்கப் படுகின்றன. 

இந்தக் குளங்களால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பது மட்டு மல்லாமல், அருகில் இருக்கும் கிணறுகளும் வற்றாமல் பார்த்துக் கொள்ளப் படுகின்றன. 

மேலும் மீன்கள் மூலம் கிராமத்திற்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத் தையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை. 

அந்த வகையில், கிராமம் முழுவதும் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டில் அருகிலும் ஒரு மரக்கன்று நடப்பட்டு அவற்றையும் பராமரிக்கிறார்கள். 

கிராமச் சந்தை களில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்திருக் கிறார்கள். அதற்கு பதில் துணிப் பைகளை மட்டுமே பயன் படுத்துகிறார்கள். பெரும் பாலும் கிராமத்திற்குள் சைக்கிள் மூலமே பயணம் செய்கிறார்கள்.
இதைக் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், இவை அனை த்தையும் கிராமத் தின் ஒவ்வொரு குடிமகனும் கடை பிடிப்பதிலே உண்மை யான சவால் அடங்கியிருக்கிறது. 

அதனை திறமையாக கையாண்டி ருக்கிறது மீனாங்கடி கிராமம். அடிக்கடி கிராம கூட்டங்கள் நடத்து வதன் மூலமாகவும், வெளி மாவட்ட இயற்கை ஆர்வலர்களை அழைத்து 

பல கருத்தரங்குகள் நடத்து வதன் மூலமாகவும், தங்களின் நோக்கம் அனைவ ரிடமும் சரியாகப் போய்ச் சேர வைத்திருக் கிறார்கள். 

சுருக்கமாக சொல்ல வேண்டு மென்றால், இந்தப் பணிக்காக, தங்கள் கிராமத்திற்காக தங்களையே அர்பணித் திருக்கிறார்கள் இந்த ஊர் வாசிகள்.
இவர்களின் தொடர் செயல்பாடு காரண மாக உலக கவனம் மீனாங்கடி கிராமத்தின் மீது பட ஆரம்பித்தது. 

கிரீன் கேரளா எக்ஸ்பிரஸ் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற முதல் ஐந்து பஞ்சாயத் துகளில் மீனாங்கடி கிராமமும் ஒன்று. 

மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட த்தின் கீழ் ஆண்டு தோறும் வழங்கப் படும் தேசிய விருதுகளில், 

சிறந்த செயல் பாட்டிற்கான பிரிவில் கடந்த மூன்றாண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறது மீனாங்கடி கிராமம். 

கிராமத்தி னரின் செயல் பாட்டை கண்ட கேரள அரசு, சமீபத்திய மாநில வரவு செலவு திட்ட த்தில், 

மீனாங்கடி கிராமத்தின் மேம் பாட்டிற்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திரு க்கிறது என்பது கூடுதல் தகவல். 

அந்த தொகையானது மீனாங்கடி கிராம கூட்டுறவு வங்கி மூலம், இயற்கை விவசாயத்திற்கும், கிராம மேம்பாட்டிற்கும் பயன் படுத்தப் படுகிறது.

ஒரு கிராமம் தன்னைச் சுற்றி இருக்கும் சூழலியல் பிரச்சனை களை கவன மாக கையாண்டு அதில் வெற்றி பெற்று, ஒரு முன்னு தாரண கிராம மாக மாறியி ருப்பது சாதாரண விஷயம் இல்லை. 
இந்த நிலைக்கு வர அந்த கிராம மக்களின் அயராத உழைப்பை அனைத்து நாடுகளும் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக் கின்றன. 

தங்கள் பயணத்தின் சிறிய வெற்றியாகவே கார்பன் நடுநிலை சாதனையை மீனாங்கடி கிராம மக்கள் பார்க்கிறார்கள். 

உலக அளவில் இயற்கை சமநிலை கொண்ட அற்புதமான கிராமமாக தங்கள் கிராமத்தை மாற்று வதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. அவர்களின் பயணம் வேகமானது.

கார்பன் வெளி யீட்டால் சுற்றுச் சூழலுக்கு என்ன பிரச்னை வரும் என்பது பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத் தவே போராட வேண்டியி ருக்கிறது. 
ஆனால், மீனாங்கடி மக்கள் அதற்கு தீர்வு யோசித்து, அதை செயல் படுத்தியும் காட்டி யிருக்கி றார்கள். 

செய்ய நினைத்ததை செய்த கேரள கிராமம் !
ரமணா திரைப் படத்தில் ஒரு காட்சி வரும். யூகி சேது விஜய் காந்தை கண்டறிந்து அவரை நெருங்கி விடுவார். 

ஆனால், விசாரணை கமிஷன் ஆட்கள் ஒரு ஆஃபீஸ்ல லஞ்சம் வாங்கு றவன போட்டுக் கொடுக்கிறவன், 

லஞ்சம் வாங்காத ஆளாதான இருக்கும் என பேசிக் கொண்டி ருப்பார்கள். உலக நாடுகள் விசாரணை கமிஷன். மீனாங்கடி மக்கள் தான் யூகி சேது.