கத்தார் பிரச்னையும், காரணமும் !

அரபு வளைகுடாவில் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறது கத்தார். சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ராஜதந்திர உறவுகள் அனைத்தையும் கத்தாருடன் முறித்துள்ளன.
கத்தார் பிரச்னையும், காரணமும் !
வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்துள்ளன. கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தர விட்டுள்ளன. 

அரபு பாலையில் தனியாக நிற்கும் சித்ரா மரமாக இருக்கிறது கத்தார். அந்த மரத்தின் நிழலில் ஏறத்தாழ 6.5 லட்சம் இந்தியர்கள், தங்கள் எதிர் காலம் குறித்த அச்சத்துடன் அமர்ந்தி ருக்கிறார்கள். 

இந்தச் சூழ்நிலை யில் கத்தாரின் நிலை மையைப் புரிந்து கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு அதிகமி ருக்கிறது.

அந்தத் தேசத்தின் பிரச்னை... அது சம்பந்த மான நமக்குள்ள சந்தேகங்கள் குறித்த விளக்கம் தான் கீழே உள்ள 12 கேள்வி பதில்கள்...

ஏன் திடீரென்று கத்தார் தேசம் தனிமைப் படுத்தப் பட்டிருக் கிறது... அரபு தேசங்கள் தங்கள் ராஜ தந்திர உறவு களை ஏன் முறித்துக் கொண்டன...?

கொஞ்சம் ஆழமாகப் பார்த் தோமானால், இது திடீரென்று முளைத்த பிரச்னை அல்ல... 2014 ஆம் ஆண்டு முதலே கத்தார் தேசத்தை, வளைகுடா ஆலோ சனை சபை (Gulf Cooperaion Council) சந்தேகக் கண்ணோடு தான் அணுகி வந்தது. 

அது, கத்தார் நம்மோடு கை குலுக்கிக் கொண்டே, ஈரான், ஹமாஸுடன் கை குலுக்குவ தாகச் சந்தேகித்தது. 

அப்போதே, கத்தாரை எச்சரித்தது. ஆனால், இப்போது எழுந்துள்ள பிரச்னை க்குக் காரண மாகக் கூறப் படுவது கத்தார் இளவரசர் ஷேக் தமீமின் உரை.

அண்மையில் நடந்த ராணுவ பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய ஷேக் தமீம், “ஈரான், இஸ்லாமிய சகோத ரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) 
மற்றும் ஹமா ஸுடன் நாம் இணக்கம் பாராட்ட வேண்டும்” என்று பேசிய தாக, கத்தார் தேசத்துக்குச் சொந்த மான கத்தார் செய்தி நிறுவன த்தின் இணைய தளம், 

சமூக ஊடகங்கள் அனைத் திலும் செய்தி வெளியிடப் பட்டன. அதைத் தொடர்ந்து தான் பல தேசங்கள் தங்கள் ராஜாங்க உறவு களை முறித் துள்ளன.

ஹூம்... வளைகுடா ஆலோசனை சபை என்றால் என்ன...?

வளைகுடா ஆலோசனை சபை என்பது அரசியல், பொருளா தாரக் கூட்ட மைப்பு. இது, 1981 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட அமைப்பு. 

இதில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் உள்ளன.

அந்த அமைப் பிலுள்ள எந்தெந்த தேசங்கள் கத்தாரு டனான உறவை முறித் துள்ளன..?

பஹ்ரைன் தான் முதலில் தன் உறவை முறித்தது. அதைத் தொடர்ந்து பத்து நிமிட இடைவெளி யில் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து, மாலத்தீவு 

என அடுத் தடுத்து தனது உறவை முறித்துக் கொண்டன. சில நாள் களுக்குப் பின் ஜோர்டானும் தன் உறவை முறித்துக் கொண்டது.

சரி... ஷேக் தமீம் அப்படிப் பேசியது உண்மையா... அவர் ஹமாஸுடன் இணக்கம் பாராட்ட வேண்டுமென்றா பேசினார்...?

'இல்லை' என்கிறது கத்தார். அந்தச் செய்தி தங்கள் ஊடகத்தில் வந்த சில நிமிடங் களிலேயே இதை மறுத்து விட்டது. 

கத்தார் பிரச்னையும், காரணமும் !
தங்கள் இணைய தளம்... சமூக ஊடகக் கணக்குகள் அனைத்தும் ஹேக்கர் ஸால் ஹேக் செய்யப் பட்டு விட்டதாகக் கூறியது. இது குறித்து விசாரித்த அமெரிக்காவின் FBI-யும் இதே கருத்தைத் தான் வலியுறுத்துகிறது. 

FBI அமைப்பு, கத்தாரின் செய்தி இணைய தளத்தை ஹேக் செய்தது ரஷ்யர்கள் என்கிறது. ரஷ்ய அரசு இதை மறுத்து விட்டது. ரஷ்ய அரசுக்கும் இந்தச் செயலு க்கும் தொடர் பில்லை என்று கூறி விட்டது.

ஹமாஸ்... தெரிகிறது. அது, பாலஸ்தீன விடுதலை அமைப்பு. இஸ்லாமிய சகோத ரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) என்றால் என்ன... அதை இஸ்லாமிய நாடுகளே வெறுக்க என்ன காரணம்...?

இஸ்லாமிய சகோதர த்துவ அமைப்பு (Muslim Brotherhood) 1928 ஆம் ஆண்டு எகிப்து இஸ்லாமிய அறிஞர் ஹசன் - அல்- பானாவால் உருவாக்கப் பட்ட ஓர் அமைப் பாகும். 

இது தொடக்க த்தில் அறக்காரி யங்களில் ஈடுபட்டு வந்தது. அப்துல் நாசருடன் இணைந்து எகிப்தில் பிரிட்டன் ஆக்கிர மிப்பை எதிர்த்தும், 

முடி யாட்சிக்கு எதிரா கவும் போர் செய்தது. நாசரை அந்தத் தேசத்தின் அதிபராக அமர வைத்ததில் இந்த அமைப்பு க்கு முக்கியப் பங்கு இருக்கிறது. 

ஆனால், நாசர் மதச்சார் பற்ற கொள்கை களைத் தழுவியது இந்த அமைப்பு க்குப் பிடிக்க வில்லை. அது விரும்பியது இஸ்லாமிய தேசத்தை. 

இதனால், இஸ்லாமிய சகோத ரத்துவ அமைப்பு முன்னணித் தலைவர் சையத், நாசரை படுகொலை செய்யத் திட்ட மிட்டார். ஆனால், அந்த முயற்சி முறிய டிக்கப் பட்டு, சையத் கைது செய்யப் பட்டு, தூக்கிலிடப் பட்டார்.

இந்த அமைப்பு, இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வளர்ப்ப தாகவும், தீவிரவாதச் செயல் களில் ஈடுபடு வதாகவும் 
தகவல்கள் வந்ததை யடுத்து பஹ்ரைன், எகிப்து, ரஷ்யா, சவுதி, சிரியா மற்றும் அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த அமைப்பைத் தடை செய்துள்ளன.

ரஷ்யா இந்த அமைப்பைத் தடை செய்த தற்கும்... கத்தார் செய்தி நிறுவன த்தை ஹேக் செய்ததில் ரஷ்யா பெயர் அடிபடுவ தற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா...?

இருக்க லாம்... கத்தார் இஸ்லாமிய சகோதர த்துவ அமைப் புடன் நெருக்க மாக இருப்ப தாகக் கருதி, கத்தாரைத் தனிமைப் படுத்தக் கூட இது போலச் செய்திருக் கலாம். 

இந்த விவகார த்தில் இன்னொரு கருத்தும் இருக்கிறது. கத்தார், பாலஸ் தீனத்துக்கும் ஹமாஸு க்கும் உதவி செய்வதாக இஸ்ரேல் நினைக் கிறது. அதனால், இஸ்ரேல் - சவுதி கூட்டணி தந்திர வேலை தான் இது என்றும் ஒரு கருத்து இருக் கிறது.

ஹூம்... கத்தார் தனிமைப் படுத்தப் பட்டு விட்டது. இதை வளைகுடா ஆலோசனை சபையில் விழுந்த விரிசலாகக் கருதலாமா...?

அப்படிக் கருத முடியாது. கத்தாரைத் தவிர, அனைத்து நாடுகளும் இணக்க மாகத் தான் இருக்கின்றன. குவைத் இந்த விவகாரத்தில் பிற நாடுகளைச் சமாதானப் படுத்தும் பேச்சு வார்த்தை யில் இறங்கியி ருக்கிறது.
அமெரிக்கா வின் நிலைப்பாடு என்ன...?

'கத்தாரு க்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடி க்கைகள், தீவிர வாதத்துக் கான முடிவின் தொடக்கம்' என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்தார். 

அமெரிக்கா வின் பாதுகாப்புச் செயலாளர் ராபர்ட் கேட்ஸ், கத்தாரைக் கடுமை யான வார்த்தை களால் தாக்கி இருக்கிறார். 

அடிப்படை வாதிகளு க்குக் கத்தார் பொருளாதார உதவி செய்வதை உடனடி யாக நிறுத்த வேண்டும் எனக் கடுமை யான சொற்களில் கருத்துத் தெரிவித் துள்ளார். 

கத்தாரின் மிகப்பெரிய ராணுவ விமானத் தளமான அல்-உதய்த் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 

புவியியல் ரீதியாகக் கத்தார், அமெரிக்காவுக்கு மிக முக்கிய மான நாடு. அதனால், அமெரிக்கா எந்தக் கடுமை யான நிலைப் பாடும் எடுக்காது என்று தான் தோன்று கிறது.

அல்ஜசீரா தலைமை அலுவலகம் கத்தார் விவகார த்தில் அல்- ஜசீராவை முடக்க வேண்டும் என்ற குரலும் கேட்கிறதே...?

ஆம். அதை முன் வைப்பது சவுதி தான். நேற்று இரவு பத்து மணிக்கு (இந்திய நேரத்தில்) தங்கள் இணைய தளத்தை ஹேக் செய்ய முயற்சி நடப்ப தாக அல்-ஜசீரா செய்தி வெளி யிட்டது. 
கத்தார் பிரச்னையும், காரணமும் !
அல்-ஜசீரா... தொடந்து சிரியா வின் அவலங் களையும், அரேபிய ஆட்சியா ளர்களின் முடியாட்சி அட்டூழியங் களையும் வெளிக் கொண்டு வருகிறது. 

இது, சவுதிக்குச் அசெளகர்ய மான ஒன்று... அதனால், இந்தப் பிரச்னை யில் அல்-ஜசீரா வையும் முடக்கப் பார்ப்ப தாகத் தான் தெரிகிறது.

சரி... அங்குள்ள மக்களின் நிலை என்ன... குறிப்பாக இந்தியர் களின் நிலை... உணவுத் தட்டுப் பாடு என்றெல் லாம் செய்தி வருகிறதே...?

கத்தார் தனது உணவுத் தேவைக் காகப் பெரும் பாலும் அண்டை நாடு களைத் தான் நம்பி இருக்கிறது. 

எல்லைகள் சீல் வைக்கப்பட்டு விட்ட நிலையில், மக்கள் உணவுக்காகப் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, உணவு களை அதிக அளவில் சேகரித்து வைக்கத் தொடங்கி யுள்ளனர். 

ஆனால், ஆட்சியாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறார்கள்.

கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் எந்தெந்த நாடுகள் கத்தாருடன் உறவில் இருக் கின்றன...?

பஹ்ரைன், எகிப்து, சவுதி, மாலத்தீவு, அமீரகம், லிபிய கலிஃபா ஹஃப்தார் அரசாங்கம் மற்றும் யேமனைத் தவிர்த்து பெரும் பாலான நாடுகள் கத்தாரு டன் உறவில் தான் இருக்கின்றன. 

94 தூதுக் குழுக்கள் கத்தாரில் இயங்கி வருகின்றன. 34 நாடுகளின் தூதரக அலுவல கங்கள் இன்னும் செயல் பாட்டில் தான் இருக்கி ன்றன.

எப்போது இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்...?
கத்தார் பிரச்னையும், காரணமும் !
இந்தப் பிரச்னை யில் எங்கள் பிழை எதுவு மில்லை. நாங்கள் சரணடைய மாட்டோம் என்று கத்தார் கூறி விட்டது. 

கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான், நாங்கள் எதற் காகவும், யாருக் காகவும் எங்கள் வெளியுறவுக் கொள்கை களையும், தேசத்தின் இறை யாண்மை யையும் விட்டுத் தர மாட்டோம். 

சர்வதேசச் சமூகம் எங்களுடன் இருக்கிறது. அது, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும் என்று கூறியுள்ளார். 

இதனிடையே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, வெள்ளை மாளிகை பேச்சு வார்த்தை க்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்படி யானச் சூழலில் இந்தப் பிரச்னை உடனே முடியும் என்று தோன்ற வில்லை.
Tags: