மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு ரயிலில் மேல் வகுப்பில் ஒதுக்கப்பட்ட இடம் !

இந்திய ரயில்களில் மாற்றுத் திறனாளி களுக்கான மோசமான உள்கட்டுமான வசதியை மாற்றுத் திறனாளி விளையாட்டு வீராங்கனை சுவர்னராஜ் விமர்சித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு ரயிலில் மேல் வகுப்பில் ஒதுக்கப்பட்ட இடம் !
ரயிலில் பயணம் செய்த போது, அந்த ரயில் பெட்டியின் தரையில் படுத்து றங்க கட்டாயப் படுத்தப்பட்ட பின்னர், அவர் இந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

விதி முறை களுக்கு அப்பாற்பட்டு அவருக்கு மேல் படுக்கை வழங்கப் பட்டிருந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சக்கர நாற் காலியைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் ஒருவர், மேல் படுக்கை க்கு ஏறி செல்வது முடியாதது. 

என்னுடன் பயணித் தவர்கள் ரயில் படுக்கைகளை மாற்றிக் கொள்ள மறுத்து விட்டனர் என்று அவர் கூறி யுள்ளார்.

இது பற்றிய விசாரணைக்கு அரசு ஆணை யிட்டுள்ளது. ஆனால், இந்த பிரச்சனைக்கு கொடுக்கப்படும் வழக்கமான பதில் தேவையில்லை,. நிரந்தரமான தீர்வுகளே வேண்டும் என்று சுவர்னராஜ் கூறுகிறார்.
இந்த சம்பவம் நடைபெற்ற ஞாயிற்றுக் கிழமை யன்று இந்தியா வின் மேற்கி லுள்ள நாக்பூர் நகரத்தில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு சுவர்ன ராஜ் பயணம் செய்தார். இந்த பயணத் திற்கு 12 மணி நேரம் எடுத்தது.

இவருடைய இந்த ரயில் பயண அனுபவம் தேசிய ஊடகங்களில் வெளி வந்த பிறகு, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணை க்கு உத்தர விட்டுள்ளார்.

அமைச்ச ரின் இந்த நடவடிக் கையை வரவேற்றுள்ள சுவர்ன ராஜ், இது மட்டும் போதாது என்று தெரிவித்தி ருக்கிறார்.

"என்னுடன் ஒரு முறை பயணம் மேற்கொள்ள வேண்டு மென அமைச்சர் பிரபு விடம் வேண்டு கோள் விடுத் துள்ளேன். 

அப்போது தான் மாற்றுத் திறனாளிகள் சந்திக் கின்ற பிரச்சனை களின் உண்மை யான அளவை அவர் உணர்வார்" என்று அவர் கூறி யுள்ளார்.
மாற்றுத் திறனாளி கள் தங்கு தடையின்றி பயணம் செய்வதற் கான வசதிகள் இந்தியா வின் பல ரயில் நிலைய மேடை களிலும், ரயில் களிலும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

"ரயில் பெட்டி யின் தரையில் படுக்க வைத்தது என்பதோ அல்லது 12 மணி நேரம் பயணத்தில் மாற்றித் திறனாளி களுக்கு உகந்த கழிவறை வசதிகள் இல்லை என்பதோ என்னை பற்றிய பிரச்சனை யல்ல. 

அன்றாடம் என்னை போன்ற ஆயிரக் கணக்கான பயணியர் இத்தகைய பிரச்ச னையை சந்திக் கிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட விரும்பு கிறேன்" என்கிறார் சுவர்ன ராஜ்.

கீழ்மட்ட த்தில் படுக்கை பெற்றி ருந்த அவருடன் பயணம் மேற் கொண்டோர் யாரும் தன்னுடன் அதனை மாற்றிக் கொள்ள மறுத்ததில் எமாற்றம் அடைந்து ள்ளதாகவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
"வழக்க மாக மக்கள் பரிதாபப் பட்டு, தங்க ளுடைய இருக்கை களை மாற்றிக் கொள்ள சம்மதிப்பர். ஆனால், இந்த முறை மறுத்து விட்டனர். எதனால் என்று எனக்கு தெரிய வில்லை. 

ஆனால், நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்" என்று அவர் தன்னுடைய ஆதங்க த்தை வெளியிட் டுள்ளார்.

"மாற்றுத் திறனா ளிகள் யாருடைய பரிதாப த்தையும் எதிர் பார்ப்ப தில்லை", என்று அவர் மேலும் கூறி யுள்ளார்.

"நாங்கள் சமத்துவ மாக நடத்தப் படுவதையே விரும்பு கிறோம். உலக நாடுகள் பல வற்றில் நான் பயணம் மேற்கொண் டுள்ளேன். எந்தவொரு பாகு பாட்டையும் உணர வில்லை" என்கிறார் அவர்.

பிற சர்வதேச விளையாட்டு போட்டி களோடு தென் கொரியா வில் நடை பெற்ற ஆசிய பாராலிம்பிக் போட்டி களில் இந்தியா வின் சார்பில் பங்கேற் றுள்ளார்.
இந்தியா வில் 20 மில்லிய னுக்கு மேலானோர் உடற்சார் அல்லது கற்றல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி களாக உள்ளனர். 

ஆனால், பெரும் பான்மை யான பொது விடங் களிலும், சேவை களிலும் மாற்றுத் திறனாளி களுக்கு ஆதரவு அளிக்கும் உள்கட்டு மான வசதிகள் இல்லை....  பிபிசி
Tags:
Privacy and cookie settings