ராகுலை அடித்து துவைக்கும் பாஜகவின் விமர்சனம் !

நானும் ரவுடி தான்.. நானும் ரவுடி தான்.. என்று வாண்டெட்டாக வந்து வண்டியில் ஏறும் வடிவேலுவின் நகைச் சுவையை, பாஜகவினர் அதிகம் ரசித்திருப் பார்களா என்று தெரியவில்லை. 
ராகுலை அடித்து துவைக்கும் பாஜகவின் விமர்சனம் !
ஆனால், அதே பாணியில் தான் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் முயற்சி கள் ஒவ்வொன் றையும் மிச்சம் வைக்காமல் கலாய்த்து விடுகின் றனர். 

நாட்டையே வருத்த த்தில் ஆழ்த்தி யிருக்கும் மத்திய பிரதேச விவசாயி களின் போராட்ட த்திலும் இதையே தொடர்ந் திருப்பது சோக மான ஒன்று தான்..! 

மத்திய பா.ஜ.க. அரசு விவசாயி களுக்கு எதிரானது என்ற குரலை டெல்லி யில் அழுத்த மாகப் பதிவு செய்தனர் தமிழக விவசா யிகள். 

அப்போது பல மாநில த்தைச் சேர்ந்த விவசா யிகள் அதற்கு ஆதரவு தந்த போதும், பெரிய விளை வுகள் ஏதும் ஏற்பட வில்லை.

ஆனால், மிக தாமதமாக அதன் தாக்கத்தைப் பிரதிபலித் திருக்கிறது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்து வரும் விவசாயி களின் போராட்டக் குரல். 
இந்த விஷய த்தில், நாடெங்கி லுமுள்ள விவசாயிகளின் மனத்தை ரண மாக்கி யிருக்கிறது அங்குள்ள மண்ட்சோர் மாவட்ட த்தைச் சேர்ந்த விவசா யிகள் மீதான துப்பாக்கிச் சூடு.

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய 

வலியுறுத்தியும் போராட்டங்களை முன்னெடுத்தனர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள். 

சில வாரங்க ளாகவே பற்றி யெரிந்த இந்த விவகாரத் தினால், சில பகுதி களில் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமை யிலான மாநில அரசு. 


இதனை மீறி மண்ட்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முனைந்த போது, அவர்கள் மீது துப்பா க்கிச் சூடு நடத்தி யிருக்கின்றனர் போலீசார். 

இதில் 5 பேர் மாண்ட தாக, அம்மாநில உள்துறை அமைச்சரே ஒத்துக் கொண்டி ருக்கிறார். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக மண்ட்சோர் மாவட்டத் திற்குள் புகுந்து சம்பவ இடத்திற்குச் செல்ல முயற்சித் திருக்கிறார் ராகுல் காந்தி. 
சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத் போன்ற அவரது சகாக்களும் உடன் சென்றிருக் கின்றனர். 

இதனைப் பார்த்த போலீஸ், ‘காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி இல்லை’ என்று வழி மறிக்க, அதனை மீறிச் சென்ற தற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார் ராகுல். 

இத்தோடு விஷயம் முடிய வில்லை. ’ஜாமீனில் செல்ல மாட்டேன்’ என்று அடம் பிடித்த ராகுல், இன்று மாலையே சிறையி லிருந்து விடுவிக் கப்பட்டிரு க்கிறார். 

ராகுலின் இந்த முயற் சியை, ’சம்பவம் நடந்த இடத்தில் போட்டோ எடுப்பத ற்கான ஒரு வாய்ப்பு’ என்று கலாய்த் திருக்கின் றனர் பா.ஜ.க.வினர். 

’பதட்ட மாக இருக்கும் இடத்தி ற்குச் செல்லும் முன்பாக, அது பற்றி ராகுல் பேசியி ருக்க வேண்டும். 

ஆனால் அவரோ, விளம்பர ஆர்வம் மிகுந்த வராக இருக் கிறார்’ என்று கிண்டல் செய்திரு க்கிறார் மத்திய அமைச்ச ரான நரேந்திர சிங் தோமர். 
இதற் கெல்லாம் ஒரு படி மேலே போய், ‘விவசாயி களின் போராட்ட த்தைப் பயன் படுத்தி, காங்கிரஸ் வன் முறையைத் தூண்டு கிறது’ என்று குற்றம் சாட்டியி ருக்கிறார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு. 

’மோடியின் அரசு விவசாயி களுக்கு எதிரானது‘ என்று சொல்லி தன் மீதான கவன த்தை அதிகப் படுத்திய ராகுல், அடுத்த தாக என்ன செய்யப் போகிறார் என்று தெரிய வில்லை. 

இந்த பிரச்சனை பற்றி, அவர் நாடாளு மன்றத்தில் குரல் எழுப்பு வார் என்பது உறுதியா கியிருக் கிறது. 

ஆனால், நடந்த விஷயங் களை வைத்து ராகுலை கைப்புள்ள யாக்கும் வேலையை சோஷியல் மீடியாவில் பாஜக முன்னெடு க்கும் என்பதில் எள்ள ளவும் சந்தேக மில்லை!
Tags:
Privacy and cookie settings