கருணாநிதி பிறந்த நாள்... ராகுல்காந்தி உள்பட 9 தலைவர்கள் பங்கேற்பு !

தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் சட்டப் பேரவை வைர விழாவும், 94-வது பிறந்த நாள் விழாவும் சென்னை யில் இன்று (சனிக் கிழமை) நடை பெறுகிறது.
கருணாநிதி பிறந்த நாள்... ராகுல்காந்தி உள்பட 9 தலைவர்கள் பங்கேற்பு !
தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் சட்டப் பேரவை வைர விழாவும், 94-வது பிறந்த நாள் விழாவும் சென்னை யில் இன்று (சனிக் கிழமை) நடை பெறுகிறது.

இதில், ராகுல் காந்தி, நிதிஷ் குமார் உள்பட 9 முக்கிய தலை வர்கள் பங்கேற் கின்றனர்.

கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி, நாகப் பட்டினம் மாவட்ட த்தில் உள்ள திருக்கு வளையில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி பிறந்தார். அவரது தந்தை முத்து வேலர், தாயார் அஞ்சுகம் அம்மை யார் ஆவர்.

கருணாநிதி யின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. தனது 14-வது வயதில் நீதிக் கட்சித் தலைவர் களில் ஒருவரான அழகிரி சாமியின் பேச்சால் ஈர்க்கப் பட்டு அரசியலில் ஈடுபடத் தொடங் கினார்.

இந்தி எதிர்ப்பு போராட்ட த்தின் மூலம் கருணாநிதி அரசியலில் தீவிரம் காட்டத் தொடங் கினார். 1957-ம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் குளித் தலை தொகுதியில் சுயேச்சை யாக போட்டி யிட்டு, வெற்றி பெற்றார்.

அதன் பின்னர், தி.மு.க. வேட்பா ளராக 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதி யிலும், 1967 மற்றும் 1971-ம் ஆண்டு சைதாப் பேட்டை தொகுதி யிலும், 
1977 மற்றும் 1980-ம் ஆண்டு சென்னை அண்ணா நகர் தொகுதி யிலும், 1989 மற்றும் 1991-ம் ஆண்டு சென்னை துறைமுகம் தொகுதி யிலும், 

1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதி யிலும், 2011 மற்றும் 2016-ம் ஆண்டு திருவாரூர் தொகுதி யிலும் போட்டி யிட்டு வெற்றி பெற்று, தொடர்ந்து 60 ஆண்டுகள் கருணாநிதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

5 முறை முதல் - அமைச்சர்

அறிஞர் அண்ணா மறைவு க்கு பிறகு 1969-ம் ஆண்டு முதல் முறை யாக தமிழகத் தின் முதல்-அமைச் சராக கருணாநிதி பொறுப்பு ஏற்றார். 

அதன் பின்னர், 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆண்டு களில் என மொத்தம் 5 முறை முதல்-அமைச் சராக இருந்து ள்ளார். கடந்த 40 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைவ ராக கருணாநிதி இருந்து வருகிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, சட்ட சபையில் அடியெ டுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறை வடைவதை யொட்டி, 

அவரது சட்ட சபை வைர விழாவை யும், 94-வது பிறந்த நாள் விழாவை யும் சேர்த்து பிரமாண்ட மாக கொண்டாட தி.மு.க. தலைமை முடிவு செய்தது.
கருணாநிதி வைர விழா

அதன் படி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், சட்டப் பேரவை வைர விழாவும் சென்னை ராயப் பேட்ட யில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (சனிக் கிழமை) மாலை 5 மணிக்கு நடை பெறுகிறது. 

விழாவுக்கான மேடை சட்ட சபை வடிவில் அமைக்கப் பட்டுள்ளது. விழாவு க்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் தலைமை தாங்கு கிறார். 

கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரை முருகன் அனை வரையும் வரவேற்கி றார்.

9 தலைவர்கள் பங்கேற்பு

சிறப்பு விருந்தினர் களாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநில முதல்- மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவ ருமான நிதிஷ் குமார், 

தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் வி.நாராயண சாமி, 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 

மாநிலங் களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கு கிறார்கள். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறுகிறார்.
Tags:
Privacy and cookie settings