சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு வந்த மிரட்டல் கடிதம் !

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு, மும்பை 'டான்' மறைந்த ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் மிரட்டல் கடிதம் அனுப்பி யுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு வந்த மிரட்டல் கடிதம் !

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் இயக்கும் படம் மும்பையில் உள்ள தாராவி பகுதியை மையப் படுத்தி தயாராக வுள்ளதாக கூறப்பட்டது. 

மும்பையில் உள்ள நிழல் உலக தாதா ஒருவரின் வாழ்கையைத் தழுவி இப்படத்தின் கதை உருவாகி யுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. 

இதனிடையே, மும்பை 'தாதா' ஹாஜி அலிமஸ் தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலிமஸ் தான் 'பாரதிய மைனாரிட்டி சுரக்‌ஷா மஹாசங்' என்ற கட்சியை நிறுவியவர். 

இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பை யின் கள்ளக் கடத்தல் தலைவ னாகவும், நிழலுலக தாதா வாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரி கைகளில் படித்தேன். 

இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்க வில்லை. 

தேவை யில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப் படுத்தினால், அதன் பின் விளைவு களை சந்திக்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார். 

ரஜினியின் வீட்டு முகவரிக்கு அனுப்பப் பட்டுள்ள இந்தக் கடிதம் பரபரப்பை கிளப்பி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings