புதிய ஆண்ட்ராய்டு போனில் செய்ய கூடாதவை !

ஆண்ட்ராய்ட் போன் வாங்கி யவுடன் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி பல வழிகளில் அறிந்தி ருப்பீர்கள். ஆனால் முதன் முதலில் ஆண்ட்ராய்ட் போன் வாங்கும் போது 
புதிய ஆண்ட்ராய்டு போனில் செய்ய கூடாதவை !
என்ன செய்ய கூடாது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியம். கண்ணை மூடி கொண்டு ஆப்ஸ்களை நிறுவக் கூடாது. 

மிகவும் பிரசித்தி பெற்ற ஆப்ஸை மட்டும் நிறுவலாம். சில ஆப்ஸ்கள் பாதுகாப் பற்றது. ஆகை யால் எப்போதும் பாதுகாப் பாக இருப்பது நல்லது.

ஆரம்பத்தில் பேட்டரி பூஸ்டர் ஆப்ஸ் பயன் படுத்து வதை தவிர்க்கவும். இதை உங்கள் போன் ஹேங் ஆனால் மட்டும் பயன் படுத்தவும்.

உங்கள் தொடர்பு களை போனில் சேமிப்பதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் உங்கள் கூகுள் கணக்குக்கு எல்லா தொடர்பு களையும் பேக் அப் செய்வது நல்லது.

உங்கள் போனுக்கு எப்போதும் பாதுகாப்பு தேவை. போனுக்கு கடவுச்சொல் கொண்டு லாக் செய்து வைக்கவும். இதனால் மற்ற வர்கள் உங்கள் போனை பயன் படுத்தாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
நீங்கள் ஆண்ட்ராய்ட் போனை முதன் முதலில் பயன் படுத்துகின் றீர்கள் என்பதால் போனை ரூட் செய்ய வேண்டாம். 

பொதுவாக கருவிகளை ரூட் செய்தால் கூடுதல் அம்சங் களை பயன் படுத்த முடியும், ஆனால் கருவியின் வாரண்டி வழங்கப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Tags: