உலக போரில் மக்களை காப்பாற்றிய சுரங்கம் !





உலக போரில் மக்களை காப்பாற்றிய சுரங்கம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட இடம் வருகிறது. 
உலக போரில் மக்களை காப்பாற்றிய சுரங்கம் !
இப்பொழுது விளக்குகளின் உதவியால் வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. 

துருப்பிடித்து, இரும்பு தோல்கள் உரிந்த நிலையில் நிறைய கார்கள். சில நீளமாகவும், சிலவை சிறியதாகவும் இருக்கின்றன. 

தார் சாலைகளையும், மண் மேடுகளையும், கடற்கரைகளையும் பார்த்து ஆவேசமாய், சமயங்களில் அமைதியாய் ஓடிக்களைத்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குள். 

தோலுரிந்து வரலாற்றால் தூக்கி எறியப்பட்ட ஒரு நீல ஸ்கூட்டரின் பக்கவாட்டில் சிகப்பு வண்ணசுருள் முடி கொண்ட ஒரு பெண்ணின் ஸ்டிக்கர். அவரின் கனவு நாயகியாக இருந்திருக்கக் கூடும்.
இன்னும்... அழுக் கடைந்த அடுப்புகள், கருப் படைந்த பானைகள், உருக் குலைந்த உணவுக் கோப்பைகள், நசுங்கி, நைந்து போயிருக்கும் குழந்தை களின் குதூகல நடை வண்டிகள் என 

திரும்பும் திசை யெல்லாம் வரலாறு துப்பி எறிந்த மிச்சங்கள். இது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரின் " கேலெரியா போர்பொனிகா" (GALLERIA BORBONICA).

உலக வரலாற்றின் பல முக்கிய ஆதாரங் களைக் கொண்ட பழைய "பாம்பெய்" ( POMPEII) தான் இன்றைய "நேப்பிள்ஸ்" நகரம் ... மண் தோண்டினால் பொன் கிடை க்கும் பூமி. 
உலக போரில் மக்களை காப்பாற்றிய சுரங்கம் !
இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பல தேவால யங்கள் குண்டுத் தாக்குதல் களுக்கு பலியான போது, ஒன்று மட்டும் உறுதியாக நின்றது. 

போர் முடிந்த பின்பு, அதை ஆராய்ந்த போது, அதற் கடியில் ஒரு நகரமே இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. 

இப்படி, நேப்பிள்ஸில் வீடு கட்ட மண் தோண் டினால் கூட அங்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும் அளவிற்கு தன்னுள் வரலாறு களைப் புதைத்து வைத்து ள்ளது.

1853 யில், இரண்டாம் ஃபெர்டினான்ட் போர்பன் (FERDINAND BOURBON - 2 ) போர் சமயங் களில் கோட்டையில் இருந்து தப்பிக்க ஒரு சுரங்க த்தைக் கட்ட ஆரம்பித் தான். 
ஆனால், அதை கட்டி முடிப்ப தற்குள் அவனின் ஆட்சி கவிழ்க்கப் பட்டது. சில காலம் நீர் வழித்தடமாக உபயோகப் படுத்தப் பட்டது. 

இந்த சுரங்க த்தின் ஒரு பகுதியை 2005யில் கண்டுபிடித்து 7 ஆண்டுகளாக சுத்தம் செய்து கொண்டி ருந்தனர்.

மேற்கூறிய செய்தியை, 2012 ஆம் ஆண்டில் படித்த தொனினோ பெர்சிகோ (TONINO PERSICO) என்ற 90 வயது முதியவருக்கு திடீரென ஒரு ஞாபகம் வந்தது. 

இரண்டாம் உலகப் போரின் போது, வான்வழித் தாக்குத லிலிருந்து தப்ப ஒரு சுரங்கத்தில் தான் இருந்தது ஞாபகம் வந்தது. அது குறித்த தகவல் களை சுரங்க ஆராய்ச்சி யளர்களிடம் கூறுகிறார். 
அவர்களும் விரைவிலேயே அந்த இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள். அதில் அவர்கள் கண்ட விஷயங்கள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

1930 களின் ஆரம்பத்தில் வண்டிகள் நிறுத்தும் இடமாக உபயோகப் படுத்தப் பட்ட இந்த சுரங்கம், 
இரண்டாம் உலகப் போரின் போது மக்களுக் கான பதுங்கும் இடமாக இருந் துள்ளது. கிட்டத் தட்ட பத்தாயிர த்திற்கும் அதிகமான மக்கள் இங்கு பதுங்கி யிருந்திரு க்கின்றனர். 

மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்த பிறகு சில மாதங்க ளுக்கு முன்பு இது பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட் டுள்ளது.
உலக போரில் மக்களை காப்பாற்றிய சுரங்கம் !
"தாக்குதல் முடிந்த பின்னர் மேல் வந்து பார்ப்போம்... பலரின் வீடுகள் தரை மட்டமாகி யிருக்கும். அப்படி வீடிழந் தவர்கள் எல்லோரும் நிரந்தர மாக இந்த சுரங்க த்தில் தான் தங்கியி ருப்போம். 

அதிகப் படியான மருத்துவ உபகர ணங்கள் இல்லா விட்டாலும் கூட, எங்களில் இருக்கும் சில மருத்து வர்கள் மருத்துவம் பார்ப்பார்கள். கழிவறை இருந்தது. 
கணவன் போரில் ஈடுபட்டி ருப்பது குறித்து பெண்கள் வருதத்தோடு பேசிக் கொண்டிருப் பார்கள், குழந்தை களான நாங்கள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டி ருப்போம்... 

சமயங்களில் அழகான பல பாடல்களையும் பாடி மகிழ்வோம்." என்று தன் ஞாபகங் களை தட்டி எழுப்புகிறார் தொனினோ பெர்சிகோ .

"போர் நடக்கும் போது இந்த சுரங்கத்தில் இருந்து மூன்று முறை சங்கு ஊது வார்கள். அப்படி யென்றால், எதிரிப் படை இன்னும் 15 நிமிடங் களில் தாக்கு தலைத் தொடங்கும் என்று அர்த்தம். 

அனைவரும் இதனுள் ஓடி வருவோம்... இன்னும் நினை விருக்கிறது... அவள் பெயர் "இதினா" ( EDINA )... ரொம்ப அழகாக இருப்பாள். 

கருப்பு முடி, பச்சைக் கண்கள்... ஒரு முறை இப்படி அவசரமாக ஓடிவரும் போது கூட்டத்தின் கால்களில் சிக்கி... மிதி பட்டு... 

தரையோடு தரையாய் நசுக்கப் பட்டு இறந்து போனாள்..." என்று வலியோடு தன் நினைவு களை பதிவு செய்கிறார் டே ஜியோயா (De GIOIA).
உலக போரில் மக்களை காப்பாற்றிய சுரங்கம் !
வரலாற்றின் வரலாறு களை சுமந்து கொண்டி ருக்கும் இந்த சுரங்கத்தில் இன்னும் கண்டு பிடிக்கப் படாத சில பகுதிகளும் இருக்கின்றன. 

அதை நோக்கிய தேடுதலில் இருக்கி றார்கள் இத்தாலிய அகழ் வாராய்ச்சி யாளர்கள். அதைக் கண்டு பிடித்தால் இன்னும் பல ஆச்சரி யங்கள் கிடைக்கும் என்றும் நம்புகி றார்கள்.
Tags: