பழைய ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்த விவசாயி மகன் !

ஒடிசாவைச் சேர்ந்த 17 வயது இளைஞர் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பழைய ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்த விவசாயி மகன் !
ஒடிசா மாநிலம், நியாபடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லச்மன் துந்தி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பல்ப் தயாரித்து, அதில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரியில் படித்து வருகிறார். 

இவர் அறிவிய லில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். பழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து எப்படி மின்சாரம் தயாரிப்பது என்பது குறித்து லச்மன் துந்தி ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

‘ஒரு 500 ரூபாய் நோட்டில் இருந்து 5 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். 500 ரூபாய் நோட்டில் உள்ள சிலிகான் கோட்டி ங்கில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும். 
அதற்கு ரூபாய் நோட்டை இரண்டாக கிழிக்க வேண்டும். ரூபாய் நோட்டை சூரிய வெளிச்ச த்தில் வைத்து அதில் உள்ள சிலிக்கானில் ட்ரான்ஸ்ஃபார்மர் இணைக்க வேண்டும். 

இவ்வாறு செய்தால் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்’ என்று விளக்கம் அளித் துள்ளார். லச்மன் துந்தியின் இந்த புது ஐடியா தேசிய அளவில் கவனத்தை ஈர்த் துள்ளது. 

இந்த தொழில் நுட்பத்தை குறித்து ஆய்வு செய்யு மாறு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைக்கு பிரதமர் அலுவலகம் உத்தர விட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings