கோடை காலத்தில் தாகம் எடுக்கும் போது ஃப்ரிட்ஜில் வைத்த நீர் அல்லது பாக்கெட் ஜூஸ் அல்லது குளிர் பானங் களைக் குடிக்கத் தோன்றும். 

ஆனால் இவைகள் உடல் நலத்திற்கு தீங்கைத் தான் விளை விக்குமே தவிர நன்மைகளை அல்ல. ஆனால் கோடையில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், 
உடல் வறட்சியைத் தடுக்கவும் ஒரு சில சர்பத்துகள் உதவும். 

இக்கட்டு ரையில் உடல் வறட்சியைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் சில எளிய சர்பத் ரெசிபிக்கள் கொடுக்கப் பட்டுள்ளன. 

அதை தயாரித்து வைத்து அவ்வப்போது குடித்து மகிழுங்கள்.

சோம்பு சர்பத்

சோம்பு சர்பத் உடல் மற்றும் மனதை புத்துணர்ச் சியுடன் வைத்துக் கொள்ள மட்டு மின்றி, உடல் வெப்ப த்தையும் குறைக்கும். 

அதற்கு 1 டீஸ்பூன் சோம்பை 1 லிட்டர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் அந்நீரை வடிகட்டி, தேன் கலந்தால், சோம்பு சர்பத் ரெடி!
புளி சர்பத்

புளியில் உள்ள வைட்ட மின்களும், கனிமச் சத்துக் களும் உடல் வறட்சி யால் இழக்கப் பட்ட எலக்ட்ரோ லைட்டுக் களை தக்க வைக்க உதவும். 
அதற்கு சிறிது புளியை வெல்லம் மற்றும் கல் உப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் நீர் சேர்த்து கையால் கரைத்து வடி கட்டினால், புளி சர்பத் ரெடி!

கொக்கும் சர்பத்

இது மகாராஷ்டிரா வில் மிகவும் பிரபலமான ஓர் சர்பத். இந்த கொக்கும் சர்பத் புளிப் பாகவும் சுவை யாகவும் இருக்கும்.

கோடை யில் இதைக் குடித்தால், உடல் வறட்சி யில் இருந்து விடுபடலாம். 

அதற்கு கடைகளில் விற்கப்படும் கொக்கும் சர்பத்தை வாங்கி நீர் சேர்த்து, சுவைக்கு சிறிது உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.
சப்ஜா சர்பத்

இது மற்றொரு சுவை யான மற்றும் புத்துணர்ச்சி யூட்டும் அற்புதபானம். இந்த பானம் செரிமான த்திற்கு மட்டு மின்றி, உடல் வறட்சி அல்லது வெப்ப பக்கவாதம் வராமலும் தடுக்கும். 

அதற்கு ஒரு டம்ளர் குளிர்ச்சி யான நீரில் 1/4 டீஸ்பூன் சப்ஜா விதை களை போட்டு ஊற வைக்க வேண்டும்.

பின் அதில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

குல்கந்த் சர்பத்
ரோஜாப் பூ இதழ்கள் உடல் மற்றும் சருமத்தை இதமாக வைத்துக் கொள்ளும். கோடையில் ரோஜாப் பூக்கள் கொண்டு தயாரிக்கப்படும் குல்கந்த்தை வைத்து சர்பத் தயாரித்து குடித்தால், உடல் சூடு குறையும். 

அதற்கு சிறிது குல்கந்த் அல்லது உலர்ந்த ரோஜாப்பூ இதழ் களை வெல்லம் கலந்த நீரில் 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 
பின் அந்நீரை வட்டிகட்டி சிறிது நீர் ஊற்றி ஐஸ்கட்டி களை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.