தர்பூசணி பழம் இப்படி இருந்தா சாப்பிடாதீங்க... பக்கவிளைவுகள் வரும் !

கோடைகாலத்துக்கு பெஸ்ட் உணவு என்றால் அது தர்பூசணி தான், ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகம். தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது. 
தர்பூசணி பழம் இப்படி இருந்தா சாப்பிடாதீங்க... பக்கவிளைவுகள் வரும் !
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் முக்கியமான இந்த ஊட்டச்சத்தை அதிகம் கொண்டுள்ளதால் தர்பூசணி உட்கொள்வதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். 

இதைத் தவிர நம் முடி மற்றும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் அதிகம் நிறைந்துள்ளது. 

அதே சமயத்தில் தர்பூசணியை நாம் அளவுக்கதிகமாக சாப்பிட கூடாது. தர்பூசணியை காலை உணவின் போது அல்லது காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையிலும் சாப்பிடலாம். 

இதைத் தவிர மாலை நேரங்களிலும் தர்பூசணி பழத்தை நாம் சாப்பிடலாம். ஆனால் இரவு நேரங்களில் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் சில நேரங்களில் வயிற்று சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம். 

நீரிழிவு நோய் உள்ளவர்களும் உட்கொள்ளலாம்: தர்பூசணியில் விளக்கும் பல்வேறு நபர்களும் அதில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளதாக நம்புகின்றனர். 

ஏனெனில் அதிக இனிப்பு சுவையுடன் இருப்பதால் அதில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளது என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால் உண்மையிலேயே ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில் ஒரு முழு தர்பூசணியில் 6.2 கிராமிலிருந்து அதிகபட்சம் 100 கிராம் வரையிலான சர்க்கரையே நிறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

ஆனால் கெமிக்கல் பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு கேடாக முடிகிறது.

தர்பூசணி பழத்தில் என்ன கெமிக்கல் உள்ளது?

தர்பூசணியைப் பழுக்க வைக்க பார்குளோர்பெனுரான் என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டு, தர்பூசணியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.

பக்கவிளைவுகள் என்ன?

தர்பூசணி பழத்தில் உள்ள பார்குளோர்பெனுரான் எனும் கெமிக்கல் நம் உடலினுள் சென்றால், அது புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

கெமிக்கல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

தர்பூசணியை வெட்டும் போது, அதனுள் வெடிப்புகள் இருப்பின், அப்பழத்தில் கெமிக்கல் உள்ளது என்று அர்த்தம். எனவே வெடிப்பு உள்ள தர்பூசணி பழத்தினை சாப்பிடக் கூடாது.
Tags: