சிம் அட்டைகள் இல்லாமல் இனி செல்போன் பேசலாம் !

செல் போன்களில் நெட்வேர்க் (Network) சேவைகளை பெற இனி சிம் அட்டை களை பயன் படுத்த வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
சிம் அட்டைகள் இல்லாமல் இனி செல்போன் பேசலாம் !
அப்பிள், சம்சுங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘வேர்ச்சுவல் (virtual) சிம்களை அறிமுகப் படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றன.

இந்த வகை ‘e-SIM’ மூலம் எளிதாக வாடிக்கை யாளர்கள் வெவ்வேறு நெட்வேர்க்கு களுக்கு மாறிக் கொள்ளலாம். ஸ்மார்ட் போன்களின் இண்டர்பேஸ் ஸ்கிரீன் வழியாகவே சிம்மை செயற் படுத்தி விடலாம்.

இது போன்ற முயற்சியில் ஏற்கனவே சில ஆண்டு களுக்கு முன் களமிறங்கிய அப்பிள் நிறுவனம் தனது சொந்த நெட்வேர்க் சிம் அட்டைகளை அறிமுகப் படுத்தி இருந்தது.

இந்நிலை யில், அதே சேவையை போல வேர்ச்சுவல் சிம்களை அனைத்து கருவி களிலும் கொண்டு வர மொபைல் நெட்வேர்க் நிறுவனங் களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இது சம்பந்தமாக ஏடி அண்ட் டி, டி-மொபைல், வோடாபோன், ஒரேஞ்ச், எடிசலாட், ஹட்சிசன் வாம்போவா, டெலிபோனிகா ஆகிய பன்னாட்டு நிறுவன ங்கள் தீவிர ஆலோச னையில் ஈடுபட் டுள்ளன.

2016 ஆம் ஆண்டில் இந்த வேர்ச்சுவல் சிம்கள் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகின்றன.
Tags:
Privacy and cookie settings