செரீனா வில்லியம்ஸ் வயிற்றில் உள்ள கருவை என்ன செய்தார்?

ஸ்னாப்சாட் மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இம்முறை அதற்குக் காரணம் அதன் அதிபரல்ல, அதில் வெளியான பிரபல டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸின் புகைப்பட போஸ்ட். 
செரீனா வில்லியம்ஸ் வயிற்றில் உள்ள கருவை என்ன செய்தார்?
கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிப் போட்டியில் தன் அக்கா வீனஸ் வில்லியம்ஸை வென்று 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். 

அது வரை 22 கிராண்ட் ஸ்லாம்களை வென்று ஸ்டெப்பி கிராஃபின் சாதனையுடன் சமன் செய்திருந்தார் செரீனா. 

இந்த வெற்றியின் மூலம் உலகில் அதிக கிராண்ட் ஸ்லாம்களை வென்ற வீரர் என்கிற பெயரையும் பெற்றார். 

6-4,6-4 என்கிற நேர்செட்களில் வீனஸை தோற் கடித்தாலும் அது ஒரு கடுமையான மேட்ச் என்றே சொல்லலாம். செரீனா நேற்று இரவு வெளியிட்ட ஸ்னாப்சாட் படத்தில் ”20 வாரங்கள்” என்று கேப்ஷன் இட்டிருந்தார். 

பிரபல ’ரெட்டிட்’ இணைய தளத்தின் நிறுவனர் களில் ஒருவரான அலெக்ஸ் ஒஹானி யனுடன் கடந்த டிசம்பர் மாதம் செரீனாவுக்கு நிச்சயம் ஆகியுள்ளது. 
இந்நிலையில் 20 வாரங்கள் என மேடிட்ட வயிற்றுடன் போஸ் கொடுத் துள்ளதின் மூலம் அவர் கர்ப்பம் என உறுதியாகி விட்டது. இந்த விஷயம் அவரது ரசிகர்க ளிடையே செம வைரலாகப் பரவியது. 

அந்தப் படத்தில் ஆளுயரக் கண்ணாடியின் முன்னாள் நிற்கும் செரீனா மஞ்சள் நிற சிங்கிள் பீஸ் பிகினி அணிந்தி ருக்கிறார். வழக்கமாக கட்டுடலாக இருக்கும் அவர் இப்படத்தில் கர்ப்பமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

அந்தப் படத்தை சிறிது நேரத்தில் அவர் அகற்றி விட்டார். இது வழக்கமாக எல்லா செலிபிரட்டியும் செய்யும் வேலைதான் என்றாலும் விஷயம் மீடீயா- சோசியல் மீடியா என அனைத்திலும் பரவி விட்டது.

இப்போது இன்னொரு அதிசயத் தகவலும் வெளியாகி யுள்ளது. அந்தப் படத்தில் தான் 20 வாரக் கர்ப்பம் எனக் குறிப்பிட்டி ருக்கிறார் செரீனா. 

செரீனா வில்லியம்ஸ்அப்படி யென்றால் இந்த வாரத்துடன் அந்தப் போட்டிகள் முடிந்து 11 வாரங்கள் ஆகின்றது. 

வாவ்..9 வாரக் கருவை சுமந்து கொண்டு ஆஸ்திரேலியன் ஓபன் கோப்பையை வென்றுள்ளார் என மெடிக்கல் மிராக்கிள் டைப் ஆச்சர்யங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. 

அது மட்டுமில்லாமல் அந்தத் தொடர் நடந்த 20 நாட்களிலும் அவர் கர்ப்பமாகத் தான் இருந் துள்ளார். கர்ப்பத்துடனே அத்தனைப் போட்டி களிலும் கலந்து வென் றுள்ளார் என நினைத்தாலே ஆச்சரிய மளிக்க கூடியதாக உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஸ்போர்ட்ஸ் செலிப்பிரட்டிகள் தொடங்கி, பெண்ணிய வாதிகள், ரசிகர்கள், அமெரிக்க சினிமா செலிபிரட்டிகள் என வகை தொகை இல்லாமல் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 
இன்னொரு பக்கம் செரீனாவுக்கு போட்டி யாளராக இருந்த மரியா ஷரபோவா பிறந்தநாளான நேற்று அறிவித்து இருப்பது தங்களை டீஸ் பண்ணத் தான் என ஷரபோவா ரசிகர்கள் கண்ணை கசக்குவதும் நடந்து கொண்டி ருக்கிறது. 

காரணம், ஊக்க மருந்து தடைக்கு பிறகு ஷரபோவா தற்போது தான் விளையாட வந்திருக் கிறார்.

அதே போல் அந்தப் படம் அகற்றப் பட்ட பிறகு அதிகாரப் பூர்வமாக செரீனா தரப்பில் இருந்து அறிவிக்க வில்லை எனவே இது 'சும்மா லுலுலாயி' என்று ஒரு குரூப் சொல்லித் திரிந்தது. 

உலக டென்னிஸ் சங்கமும் தமது டிவிட்டர் அக்கௌண்டில் தெரிவித்த வாழ்த்தை நீக்கியது. இவற்றை யெல்லாம் சொன்னாலும் செரீனாவின் அந்தப் படம் ஸ்கீரின்ஷாட் எடுக்கப்பட்டு வெளியாகி விட்டது. 

ஒட்டு மொத்த அமெரிக்காவும் பிரபல பாடகி பியான்ஸின் சோசியல் மீடியாவை ரெப்ரஷ் செய்த படியே இருந்தனர். 
காரணம் அவர்தான் செரீனாவின் திக்கெஸ்ட் தோழி. இன்னொரு விஷயம்.. பியான்ஸும் தற்போது கர்ப்பமாக உள்ளார். பின்னர் ஒரு வழியாக செரீனா செய்தித் தொடர்பாளர் அதிகார பூர்வமாக அறிவித்தார்.
Tags:
Privacy and cookie settings