இரு அணியின் இணைப்புக்கு 7 பேர் குழு இவர்கள் !

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த, பன்னீர் செல்வம் அணி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது.
இரு அணியின் இணைப்புக்கு 7 பேர் குழு இவர்கள் !
கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் காப்பாற்ற வேண்டு மானால் பழனிசாமி அணியினரும், பன்னீர் செல்வம் அணியினரும் இணைய வேண்டும் என்று தற்போது அ.தி.மு.க.வில் கோரிக்கைகள் வலுத்து வரு கின்றன. 

இதனிடையே, டி.டி.வி. தினகரனை கட்சியி லிருந்து ஒதுக்கி வைப்பதாக பழனிசாமி அணியினர் அறிவித் ததோடு, பன்னீர் செல்வம் அணிக்கு அழைப்பு விடுத்தனர். 

இந்த அழைப்பை வரவேற்ற பன்னீர் செல்வம், தினகரன் ஒதுக்கி வைக்கப் பட்டது, நாங்கள் நடத்திய தர்மயுத்த த்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.

இதை யடுத்து, இரு அணிகளும் இணைய பன்னீர் செல்வம் அணி சார்பில் இரண்டு நிபந்தனை கள் வைக்கப் பட்டன. அதன்படி, ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், 
சசிகலா குடும்பத்தில் உள்ள 30 பேரையும், கட்சியை விட்டு நீக்கியதை அதிகார பூர்வமாக வெளியிட வேண்டும் ஆகிய இரண்டு நிபந்த னைகள் விதிக்கப் பட்டன.

இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில், பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்தக் குழு அமைக்கப் பட்டது. வைத்திலிங்கம் எம்.பி தலைமை யில் இந்தக் குழு அமைக்கப் பட்டுள்ளது. 

இதற் கிடையே, பழனிசாமி அணியுடன் பேச்சு வார்த்தை நடத்தக் குழு அமைக்கப் படும் என்று பன்னீர் செல்வம் அணியின் முனுசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், பன்னீர் செல்வம் அணியின் எம்.எல்.ஏ செம்மலை செய்தியா ளர்களிடம், "முதல்வர் பழனிசாமி அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த குழு அமைக்கப் பட்டுள்ளது. ஏழு பேர் இந்த குழுவில் இடம் பெற்று ள்ளனர். 
முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தலைமை யிலான இந்தக் குழுவில், மாஃபா. பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜே.சி.டி பிராபகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்று ள்ளனர்" என்றார்.
Tags:
Privacy and cookie settings