கருணாநிதி வைர விழா... ஏழு முதல்வர்களுக்கு அழைப்பு !

தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக சட்ட மன்றத்திற்கு, முதன் முதலில் கடந்த 1957-ம் ஆண்டு தேர்வு செய்யப் பட்டார். சட்ட மன்றத்தில் அவர் காலடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறை வடைகிறது. 
கருணாநிதி வைர விழா... ஏழு முதல்வர்களுக்கு அழைப்பு !
கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது.

1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியி லிருந்து தமிழக சட்ட பேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டார் கருணாநிதி. 

13 முறை தொடர்ச்சியாக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்துத் தேர்தல் களிலும் வெற்றி பெற்ற ஓரே சட்ட மன்ற உறுப்பின ராக இந்தியா வில் இவர் மட்டுமே உள்ளார். 

தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப் பட்டு, இந்த ஆண்டு அறுபது ஆண்டுகள் நிறை வடைகிறது. 

எனவே, அவர் எம்.எல்.ஏ- வாகத் தேர்வானதன் வைர விழாவை சிறப்பாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. 
தி.மு.க செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவரு மான மு.க. ஸ்டாலின் தலைமை யில் சென்னையில் நடை பெற்ற அக்கட்சி யின் மாவட்டச் செயலா ளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப் பட்டது.

;ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தி.மு.க தலைவர் கருணாநிதி யின் சட்டமன்ற வைர விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்ட மாக நடத்த வேண்டும். 

மாவட்ட அளவில் மட்டு மல்லாமல், மாநகரம், நகர அளவிலும் பொதுக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங் கங்களை நடத்த வேண்டும். 

ஜூன் முதல் வாரத்தில் கருணாநிதி யின் பிறந்த நாளுடன் வைரவிழா கொண்டா ட்டங்களு க்கும் ஏற்பாடு செய்து நடத்து ங்கள்.

சென்னையில் பிரமாண்ட மான வகையில் கருணாநிதி வைர விழா கருத்த ரங்கம் நடத்தப்படும். 

சென்னையில் நடை பெறவிருக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். 
பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்கள் விழாவில் கலந்து கொள் வார்கள். 

மாவட்ட அளவில் கட்சியின் அந்தந்த மாவட்டச் செயலா ளர்கள் இது போன்ற விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும்” என்று தெரிவித் துள்ளார்.

எனவே, கருணாநிதி யின் சட்டமன்ற வைரவிழா ஜூன் மாதத்தில் களை கட்டும் என எதிர் பார்க்கலாம்!
Tags:
Privacy and cookie settings