கஃபா அருகில் திருமண நிச்சயதார்த்தம் செய்த ஜோடி !

உலக முஸ்லிம் உம்மத்தின் ஆன்மீகத் தலைமைத் தலமான கஃபாவுக்கு அருகில் ஒரு துருக்கிய ஜோடி திருமண நிச்சயதார்த் தத்தை மேற்கொண்ட வீடியோ 
கஃபா அருகில் திருமண நிச்சயதார்த்தம் செய்த ஜோடி !
இணைய தளங்களில் வைரலாகப் பரவி கடும் விசன அலைகளைத் தோற்று வித்துள்ளது.

குறித்த வீடியோவில் வரும் ஆண் துருக்கியின் TRT செய்திச் சேவை நிருபரான யூஸுப் அக்யொன் என அறியப்பட் டுள்ளார். 

குறித்த வீடியோவில் கேக் பரிமாறல், மோதிரம் மாற்றல் உட்பட கேளிக்கை யான காட்சிகள் இடம் பெற்று ள்ளன. இருவரது குடும்பங் களும் இந்த வீடியோ வில் இடம் பெற்று ள்ளது.

எவ்வா றெனினும் முறையான திருமண ஒப்பந்தம் நிறைவு பெறாத நிலையிலும் முஸ்லிம் களது உச்ச புனிதத் தலத்தை கேளிக்கை க்கு எடுத்துக் கொண்டது குறித்தும் 
துருக்கி உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இணையப் பாவனை யாளர்கள் பாரிய விசனங் களை முன்வைத்து வருகின்றனர். 

‘ஒவ்வொரு வரும் தாம் விரும்பிய விதத்தில் கலாசாரங் களை ஒன்றித் தம் திருமண த்தை நடத்துவ தாகவும் தம் குடும்பங்களை ஆச்சரிய மூட்டவே
தான் இவ்வாறு இங்கே நிச்சய தார்த்தம் செய்வ தாகவும்’ பேசிய வீடியோ வையே அவர் தனது சமூக வலைத் தளத்தில் வெளியிட் டுள்ளார்.

குறித்த இளம் நிருபர் யூஸுப் அக்யொன்னின் தந்தை பஹாதீன் அக்யொன் துருக்கி யின் முன்னணிப் பத்திரிகை யொன்றின் சவூதிக்கான நிருபர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: