தீபா கணவர் தொடங்கிய புதுக் கட்சி... இது அதுல்ல !

'எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் பெயரில் புதிதாக வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்சியைத் தொடங்கி இருக்கிறார், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' பொதுச் செயலாளர் தீபாவின் கணவர் மாதவன்.
தீபா கணவர் தொடங்கிய புதுக் கட்சி... இது அதுல்ல !
'நான் சொன்னது 10 சதவிகித உண்மை களைத் தான். சொல்லாமல் இன்னும் 90 சதவிகித உண்மை களை லாக்கரில் போட்டுப் பத்திரமாகப் பூட்டி வைத்திரு க்கிறேன்' என சுய நலத்தோடு 

'சிலரைப் போல' டிமாண்ட் செய்து கொண்டிரு க்காமல், முன்பே சொன்ன நாளில் திட்ட மிட்டபடி கட்சியைத் தொடங்கி இருக்கிறார் மாதவன்.

ஜெயலலிதா சமாதியில் தொடங்கப் பட்ட கட்சிகள் எனும் பெரிய பட்டியலு க்குள் வீறுநடை போட்டு நுழைந்தி ருக்கிறது மாதவன் தொடங்கிய இந்தக் கட்சி. 

மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த (?!) தீபாவின் வெற்றி டத்தை மீண்டும் மண்ணை அள்ளிப் போட்டு நிரப்ப வந்திருக் கிறாராம் மாதவன். 

'உங்கள் மனைவி தீபா உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா எனும் கேள்விக்கு 'அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்..' எனப் பதில் அளித்தி ருக்கிறார். 
(ஆத்தீ... இது அதுல்ல..?!) மேலும், 'தீபா தொடங்கியது பேரவை; நான் தற்போது தொடங்கி இருப்பது கட்சி' என 'நம்ம அளவுக்கு அவங்க வொர்த்தே இல்ல' பாணியிலேயே பேசி இருக்கிறார்.

'எம்.ஜி.ஆர் அம்மா தீபா...' என தீபா தனது கட்சிக்குப் பெயரை வைத்த போதே எம்.ஜி.ஆ ரின் அம்மா சத்யபாமா தானே எனக்கேட்டு வகை தொகையி ல்லாமல் கலாய்த்துத் தள்ளி னார்கள் நெட்டிஸன்கள். 

ஆனால் இப்போதும் அதே மாதிரி ஒரு குழப்ப மான பெயரைத் தான் தனது கட்சிக்குச் சூட்டியி ருக்கிறார் மாதவன். 'எம்.ஜி.ஆர் தி.மு.க- வில் இருந்தார் சரி. 

ஜெயலலிதா எப்போ தி.மு.க-வில் இருந்தாங்க' என 'நீங்க வெறும் தாஸா... இல்லை லார்ட்  லபக்கு தாஸா..?' டைப்பில் குடைந்து குடைந்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

MJDMK - 'மைக்கேல் ஜாக்சன் தி.மு.க' போலன்னு கலாய்ச்சிக் கிட்டு இருக்காங்க. தினகரன், சசிகலா திட்டப்படி தான் மாதவன் தீபாவை எதிர்க்க ஆரம்பிச்சதா ஏற்கெனவே ஒரு பேச்சு உலாவுது. 
அதை மெய்ப்பிக்கிற மாதிரியே தான் இந்தக் கட்சிப் பெயரும் இருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா..? தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக இருக்கும் போது அவரோட சின்னம் என்ன... தொப்பி. 

மைக்கேல் ஜாக்சனு க்கும் ஃபேவரைட் தொப்பி. ரெண்டையும் கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும். தட் தில்லு முல்லு தில்லு முல்லு மொமென்ட்ஸ்!
Tags:
Privacy and cookie settings