கும்பகோணத்தை கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர் !

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்

எல்லோரும் இந்தியா மக்கள்

எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

எனப் பாடினார் மகாகவி பாரதி. அனைவரும் சமம் எனும் பாரதியின் கருத்துக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே வேளையில் சிலர் பலரின் சாதனைக்கு முன்னு தாரணமாகத் திகழ்கின்றனர்.

கும்பகோணத்தை கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர் !
நாம் எல்லோரும் சாதிக்கப் பிறந்த மன்னர்கள் தான். சிலர் சாதித்து விட்டனர். இன்னும் சிலர் சாதிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றனர்.

முன்னுரை :

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற நாமக்கல் கவியின் கூற்று முற்றிலும் உண்மையானது. எந்த நாடு அல்லது சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப் படுகிறார்களோ அந்த சமூகமே சிறந்த சமூகமாகும். 

உலகில் மனிதர்கள் அனைவரையும் தனித்தனியாக தன்னால் கவனிக்க முடியாது என்பதால் தான் இறைவன் பெண்ணை படைத்தான் என்பார்கள். 

உண்மை தான்… அதை மெய்ப்பிக்கும் வகையில் தாய்மொழி, தாய்நாடு, கங்கை, காவிரித்தாய் என்று பெண்களை தாயாக பாவிக்கும் சமூகம் நமது பாரத சமூகமாகும்.

பெண்கள் படும் இன்னல்கள் :

இத்தகைய புகழ்வாய்ந்த பெண்கள் பல இன்னல்களையும் சந்திக்கத்தான் செய்கின்றனர். வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை போன்றவை இந்த நூற்றாண்டிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. 
வரதட்சணையின் தாக்கத்தால் முதிர்கன்னிகளாக வாழ்க்கையை தேடிக்கொண்டி ருக்கும் பெண்கள் ஏராளம். அவர்களின் துயர்களை போக்க 
மத்திய, மாநில அரசுகளும் வரதட்சணை தடைச் சட்டம், பாலியல் கொடுமைகள் தடைச் சட்டம், பெண் கல்வி சட்டம், சொத்துரிமை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றியுள்ளது.

இந்த சட்டங்கள் ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது. பயன் பாட்டுக்கு வர வேண்டும். இத்தனை சட்டங்கள் இருந்த போதிலும் வரதட்சணை இல்லாத திருமணங்களை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. 

அவற்றின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்று  கவிதை வரிகளில் சொல்லிய வற்றை கவிதையோடு நிறுத்தி விடாமல் வாழ்க்கையி லும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

அப்போது தான் சமூகம் உயர்வானதொரு இடத்தை அடைய முடியும்.
(nextPage)
சாதித்த பெண்கள் :

ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி சாதிக்க பெண்களும் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஆண்டாள், அரசியலில் இந்திரா, அறிவியலில் கல்பனா சாவ்லா, மருத்துவத்தில் முத்துலெட்சுமி, கணிதத்தில் சகுந்தலா, 

சேவையில் அன்னை தெரசா, விளையாட்டில் பி.டி.உஷா, நீதித் துறையில் பாத்திமா பீவி, காவல் துறையில் கிரண்பேடி என்று இந்திய வரலாற்றில் கோலோச்சியவர்கள் ஏராளம். 

மேலும் பச்சேந்திரிபாய், அருந்ததிராய் போன்ற பெண்கள் பெண் இனத்திற்கே முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். தற்போது சுதந்திரம் பெற்று 60-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் 

தனது அயராத உழைப்பால், தன்னம் பிக்கையால் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்று இருக்கிறார் பிரதீபா பட்டீல்.
இதில் நம் கும்பகோணம் மட்டும் சளைத்ததா என்ன?

வாகனங்களை ஓட்டும் பல பெண்களை நாம் பார்த்து இருந்தாலும் நம் கும்பகோணத்தில் வாடகை கார் ஓட்டும் முதல் பெண்மணி தேவி விஜயகுமார்.இது நம் கும்பகோணத்துக்கு பெருமை சேர்க்கும் விசயமாகும்.

இந்த தேவியின் பெயரை ஒயிட் ரோஸ் தேவி என்று சொன்னால் தான் இங்கு அனைவருக்கும் தெரிகிறது. இவர் ஆட்டோ ஓட்டுனராக தற்போது இருந்தாலும், 
இவர் முதன் முதலில் பழகியது வாடகை கார் ஓட்டுவதற்கு தான். பொதுவாக தமது சொந்த வாகனங்களை பெண்கள் ஓட்டுவது என்பது நாம் பார்த்து வரக்கூடிய சாதாரண விஷயம் தான். 

ஆனால் தொழில் துறையில் ஒரு பெண் ஓட்டுனராக இருந்து அதிலும் வாடகை கார் ஓட்டும் தைரியம் மிக்க பெண்ணாக நம் கும்பகோணத்தில் இருப்பது மிகவும் ஆச்சரியம் மிக்க விஷயம் ஆகும்.

இந்த கட்டுரையில் அவரை பற்றிய சில செய்திகள் : அவரிடம் கேட்ட கேள்வியும் அதற்கான பதிலும்

உங்கள் சொந்த ஊர் எது?

நன்னிலம் பக்கத்தில் உள்ள வாழ்க்கை என்பது என்னுடைய சொந்த ஊர். கிருஷ்ணசாமி - பானுமதி எனது பெற்றோர்கள். எனக்கு வயது 37 ஆகிறது.என்னுடைய கணவரும் இதே துறையில் ஒட்டுனராகவே உள்ளார். 
அவர் தற்போது கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஒட்டி வருகிறார். மேலும் எனக்கு இரு மகன்கள் மூத்த மகனின் பெயர் உப்பிலி வெங்கடேஷ். 

இவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் பெயர் ஸ்ரீ ராம் . இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார் என்றார்.

உங்களுக்கு எப்படி வாடகை கார் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது?

எனக்கு திருமணம் ஆன பிறகு நானும் ஒரு சராசரி பெண்ணாகவே இருந்தேன். அதாவது குடும்பம், குழந்தைகள், சமையல், மற்றும் வீட்டு வேலை என பொழுது போனது. 

ஒரு சமயம் என்னுடைய கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே ஏன் கணவரை நினைத்து மிகவும் மன வேதனை அடைந்தேன். நாம் ஏன் நம் கணவருக்கு உதவியாக இருக்கக் கூடாது என நினைத்தேன். 

அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும், உழைக்க வேண்டும் அதற்கு நாமும் சேர்ந்து நம் கணவனோடு உழைத்தால் என்ன என்று தோன்றியது.

அதனால் எனது கணவரிடம் கார் ஓட்ட கற்று தரச்சொல்லி கேட்டேன். 

அவரும் அதற்க்கு சம்மத்தித்து எனக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்தார். ஆரம்பத்தில் எனக்கு இது சிறிது கஷ்டமாக தான் இருந்தது.

ஆனாலும் நான் இதை விடாமல் கற்று கொண்டதற்கு காரணம் என்னுடைய கணவர் தான். 

அவர் கொடுத்த ஊக்கமும் அவரின் பயிற்சியும் ஏன் ஆர்வத்தை தூண்டியது. மேலும் அவரும் ஓட்டுனராக இருந்த காரணத்தால் ஆரம்பத்தில் அவரோடு கூடவே சென்று வந்த நான் 

பிறகு அவருடைய உதவியோடு கார் ஓட்ட நன்றாக பழகி கொண்டேன். அதன் பிறகு என்னுடைய பயணம் ஆரம்பித்தது.
(nextPage)
நீங்கள் முதலில் கார் ஓட்டி சென்றது எங்கே?

நான் முதன் முதலில் ஓட்டி சென்றது சென்னை ஏர்போர்ட்டுக்கு தான். ஆரம்பத்தில் ஊட்டி செல்லும் பொது கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. 

இருந்தாலும் அந்த பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் மெல்ல மெல்ல கார் ஓட்ட பழகி கொண்டேன். பின்பு இந்த பயம் முற்றிலும் விலகி இன்று இது எளிமையாகிப் போனது. 
தற்போது டெல்லி வரை சவாரி இருந்தாலும் பயம் இல்லாமல் கார் ஊட்டி சென்று வருவேன்.
இது வரை நீங்கள் எந்தெந்த ஊருக்கு சென்று வந்துள்ளீர்கள்?

இதுவரை நான் சென்னை, திருப்பதி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, விருத்தாச்சலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கடலூர், பாண்டிச்சேரி, என தமிழ் நாட்டில் நான் போகாத ஊர் இல்லை.

நீங்கள் எந்தெந்த கார் ஓட்டுவீர்கள்?

மாருதி தொடங்கி இன்னோவா முதல் தற்போது டூரிஸ்ட்டர் வேன் வரை ஊட்டுவேன்.

வாடகை கார் ஓட்டுவது ஆண்களுக்கே சவாலாக இருக்கும் போது ஒரு பெண்ணாக நீங்கள் எப்படி சமாளிகிரீர்கள்?

இதில் எனக்கு ஒரே ஒரு சிரமம் மட்டுமே உள்ளது. நான் வெளியூர் செல்ல நேர்ந்தால் சில இடங்களுக்கு பயணிகள் சென்று அவர்கள் மீண்டும் காருக்கு திரும்பும் வரை நான் காருக்குள்ளேயே உட்கார்ந்து இருப்பேன்.

கும்பகோணத்தை கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர் !
ஆண் டிரைவர்கள் என்றால் அவர்கள் வெளியில் சென்று ரிலாக்ஸ் செய்து வருவார்கள். ஆனால் பெண்ணாகிய எனக்கு அது முடியாது. அது மட்டுமே சிரமம், இருப்பினும் அது எனக்கு கஷ்டமாக தெரிவது இல்லை.

உங்களுக்கு எப்படிப்பட்ட சவாரி வரும்?

இது வரை எனக்கு வந்த சவாரியெல்லாம் பெண்கள் மற்றும் குடும்பம் சகிதமாக வருவதால் எனக்கு எந்த ஒரு சிரமமும் தெறிவது இல்லை. 

குடும்பத்தில் நானும் ஒரு பெண்ணாக அவர்களோடு சேர்ந்து பழகி விடுவதால், அவர்களே எனக்கு துணையாக இருப்பார்கள். இதனால் தான் என்னால் தமிழ் நாடு முழுவதும் ஒரு ஓட்டுனராக சுற்றி வர முடிகிறது.

நீங்கள் வாடகை எப்படி வசூலிப்பீர்கள்?

நான் வாடகையை தவிர டிரைவர் பேட்டா கூட கூடுதலாக கேட்பது இல்லை. ஆனாலும் நிறைய பேர் என்னை உற்சாகப்படுத்தும் விதமாக நான் கேட்கும் வாடகையை விட கூடுதலாக கொடுக்கும் போது 

அதை மகிழ்ச்சியோடு நான் பெற்று கொள்வேன். இது எனக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.
உங்களுக்கு வாழ்வில் ஏதேனும் ஆசை இருக்கிறதா?
ஏன் மூச்சு இருக்கும் வரை உழைக்க வேண்டும். தற்போது மகேந்திரா பைனான்சில் ஒரு ஆட்டோ வாங்கியுள்ளோம். அதனை அடைத்தாக வேண்டும். 

மேலும் எனது கணவர் வாடகை ஆட்டோ தான் ஊட்டுகிறார். அவருக்கு ஒரு சொந்த ஆட்டோ வாங்கி தரவேண்டும். மகன்கள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். 

அவர்களை எங்களைப் போல் கஷ்டம் இல்லாமல் வாழ வைக்க வேண்டும். என்பது தான் என்னுடைய கனவு ஆசை எல்லாம் என்று கூறினார்.

டிரைவராக இருக்கிறீர்களே வீட்டில் சமையல் வேலையை யார் பார்க்கிறார்கள்?

இதிலென்ன சந்தேகம் நான் தான் பார்க்கிறேன் இதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. காலையில் 7.45 மணிக்கு எழுந்து ஸ்கூல் சவாரிக்கு சென்று வந்த பிறகு, 

மதிய உணவை தயார் செய்து சமைத்து வைத்து விட்டு மீண்டும் சவாரிக்கு சென்று வந்து இரவு உணவையும் நானே தயார் செய்து விடுவேன். 

அவ்வப்பொழுது எனது கணவர் சில உதவிகளை செய்வார்.உண்மையில் சொல்லப்போனால் எனது கணவர் எனக்கு கடவுள் மாதிரி !

அவர் என்னை உற்சாகப் படுத்துவதோடு எனக்கு உதவிகளையும் செய்து ஊக்குவிப்பார். குடும்பத்திற்கு தேவையான பணத்தை கணவன் மனைவி இருவரும் உழைத்து சம்பாதிப்பதில் எங்களுக்கு மிகக் மகிழ்ச்சி.
(nextPage)
இவ்வளவு உதவி செய்யக்கூடிய உங்கள் கணவருக்கு என்ன சொல்ல விருபுகிரீர்கள்?

கணவன் - மனைவி உறவுக்குள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் எனக்கு குருநாதர் மாதிரி, அவர் முக்கியமாக எனக்கு சொந்த காலில் நிற்பதற்கு பயிற்சி அளித்துள்ளார். அதற்காகவே நான் அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.
கார் ஓட்டப் பழகி விட்டதால் ஆண்களும் - பெண்களும் சமம் என்று நினைகிறீர்களா?

அதற்கு அவர் ஒருபோதும் இல்லை. பெண் என்பவள் நமது சமுதாயத்தில் ஆணோடு இணைந் திருக்கப் பழக்கப் பட்டவள். நானும் ஒரு சாதாரண பெண்மணி தான்.

கும்பகோணத்தை கலக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர் !
கார் ஊட்டி பல ஊர்களுக்கு சென்று வருவதால் எனக்கு ஆணவமோ, அதிகாரமோ கிடையாது. எப்போதும் என் கணவருக்கு உறுதுணை யாக இருக்கும் ஒரு உதவியாளனாகத் தான் என்னை நான் நினைத்து கொள்வேன்.

குடும்பம் என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

குடும்பம் என்பது சிறப்பாக உருவாக்கப் பட்ட ஒரு கூடு அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒருவரை ஒருவர் ஆளுமை செய்து ஆட்சி செய்யக் கூடாது. விட்டு கொடுத்து போக வேண்டும். 

அதில் தான் ஒற்றுமை இருக்கிறது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறி எங்களை ஆச்சர்யப்பட வைத்தார்.
நையாண்டிகளை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?

வறுமைக்காக வண்டி ஓட்ட வந்தாலும் நான் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். மேலும் சவாரிக்காக அழைப்பதில் சில நபர்கள் செய்யும் கிண்டல் நையாண்டிகளை நான் பொருட்படுத்துவ தில்லை. 

இதை எல்லாம் கருத்தில் கொண்டால் உலகத்தில் வாழவே முடியாது. பயந்து ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். 

நான் பயப்பட வில்லை, எதையும் சமாளிக்கும் துணிச்சல் என்னிடம் உள்ளது என்று கூறி நம்மை வியப்படைய வைத்தார்.

எப்போதும் சவாரி... சவாரி என்று உழைத்து கொண்டே இருக்கிறீர்களே எப்போதுதான் ஒய்வு?

உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டும். கையில் பணம் இருந்தால் வெளியூர் செல்ல வேண்டும் என்ற ஆசை கூட கிடையாது. நம் வீட்டிலேயே இருக்க வேண்டும் அதை தான் நான் ஒய்வு என்று கருதுகிறேன்.
பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உங்களின் சொந்த காலில் நிற்க பழகுங்கள், நம்பிக்கையோடு இருங்கள். மகிழ்ச்சி என்பது உங்கள் கையில் இருக்கிறது. 

குடும்பத்தை நேசியுங்கள்.... சந்தோசமாக இருங்கள். எதை கண்டும் பயபடாதீர்கள், தைரியமாக இருங்கள் என்று கூறி தைரியப் படுத்தினார். 

மேலும் அவரது செல்போனை அழைத்தால் அதில் "எந்தப் பக்கம் காணும் போதும் வானம் உண்டு. எந்த பாதை போகும் போதும் ஊர்கள் உண்டு" என்ற பாடல் கலர் டியுனாக ஒழித்து கொண்டே இருந்தது.

உண்மை தான் வெளியே செல்ல பயந்து நடுங்கும் பெண்களுக்கு இடையில் இப்படி ஒரு பெண் ஓட்டுனரை பார்த்து வியந்து போனோம்.

பொதுவாக சிலர் வீட்டில் பெண்களை மட்டும் காரில் வெளியூருக்கு அனுப்பும் சூழ்நிலையில் ஆண் டிரைவர்களோடு தனியாக அனுப்ப யோசனை செய்வார்கள், 

அவர்களுக்கு இந்த தேவி விஜயகுமார் மிகவும் உதவியாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமமும் இல்லை.
Tags:
Privacy and cookie settings