கர்ப்பிணிகள் வாக்கிங் செல்வது நல்லதா !

இன்று எல்லோருமே வோக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தை களைக் கூட உடன் அழைத்துச் செல்கிறார்கள். கர்ப்பிணி களும் வோக்கிங் செல்வது நல்லது அது, அவர்களை சுறுசுறுப் பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

 

* கர்ப்பிணி களைப் பொறுத்த வரை அளவோடு வோக்கிங் செல்வது தான் நல்லது. 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களது உடலையும், 

மனதையும் ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ள உதவும், கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல் நிலையை பலப் படுத்தும் என்றும் டிப்ஸ் கொடுக் கின்றனர் டாக்டர்கள். 
* கர்ப்பிணி களைப் பொறுத்த வரை, அந்த கர்ப்பக் காலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங் களிலும் களைப்பு உடனேயே ஏற்பட்டு விடும். அவ்வாறு களைப்பு ஏற்படும் போது தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. 

* சிலர் கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் நிலையில் இரவில் தூங்க வெகு நேரமாகும் சூழ்நிலை ஏற்படலாம். கர்ப்பக்கால களைப்பின் போது இரவு நேரத்தில் முன்னதாக படுக்கைக்கு செல்வது தான் நல்லது. 

* அதில், இடையூறுகள் ஏற்படும்பட்சத்தில், வேலையின் இடையே ஒரு மணி நேரமாவது அமைதியாக கால்களை உயரே தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்தி ருப்பது நல்லது.

மேலும், தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம். களைப்பை ஏற்படுத்தும் வேலை களை கட்டாயம் செய்யக் கூடாது. 

 

* சில பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் மனஇறுக்கம் ஏற்படுவது போன்று இருந்தால், அதில் இருந்து விடுபட மிதமான உடற் பயிற்சிகளை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத வாறு செய்யலாம். அல்லது, 
வோக்மெனில் இசை கேட்டு மகிழ்ச்சியை வர வழைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள். இது குழந்தை களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மையையே தரும்.
Tags:
Privacy and cookie settings