செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். ஏர்செல்ஃபி தெரியுமா?

ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரு க்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான்.

செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். ஏர்செல்ஃபி தெரியுமா?
தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக் கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலை தளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது.

ஆரம்ப காலங்களில் Selfie எடுப்பதற்கு கையை ஒட்டடை அடிக்கும் கம்பு போல் தூக்கிக் கொண்டு திரிந்தோம், பின்பு Selfie Stick வந்து நம் கை வலியை சற்று குறைத்தது.

ஆனால் அதிலும் ஒரே மாதிரியான ஆங்கிளில் படம் எடுக்க முடியும். அதுவும் க்ரூப் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் 

அனைவரையும் பிரேமுக்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வரவுள்ளது AirSelfie Camera.

உள்ளங்கை அளவே உள்ள இந்த சாதனம் ஒரு பறக்கும் கேமரா(Drone). நம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இதனை கட்டுப்படுத்தி படங்களை நல்ல வைட் ஆங்கிளில் எடுக்கலாம்.

கட்டுமானம் மற்றும் சார்ஜ்:
உறுதியான anodized aluminum case மூலம் உருவாக்கப் பட்ட இந்த பறக்கும் கேமரா 94.5மிமீ நீளமும், 67.4மிமீ அகலமும், 10.6மிமீ தடிமனும் அளவை கொண்டது. 

இதன் மொத்த எடையும் 52 கிராம் மட்டுமே. இதனை மொபைலுடன் பொருத்தும் வகையில் கேஸுடன் விற்பனைக்கு வரவுள்ளது. 

இந்த கேஸ் ஐபோன் 6 மற்றும் 6s, ஐபோன் 7 மற்றும் 7s, ஹுவாவே P9 மொபைல் மற்றும் கூகுள் பிக்சல் மொபைல் போன்களுக்கு பொருத்தும். 

AirSelfie கேமராவை இந்த கேஸில் மொபைலுடன் வைத்தால் போதும் 30 நிமிடங் களில் சார்ஜ் ஆகிவிடும். ஒரு முறை சார்ஜ் செய்து விட்டால் AirSelfie கேமரா 3 நிமிடங்கள் பறக்க இயலும். 

முழு சார்ஜ் உள்ள மொபைல் மூலம் 20 முறை இந்த AirSelfie கேமராவை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இது போக USB மூலம் நேரடியாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

இதனை எந்த ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனிலும் இயக்கலாம்.
எப்படி பறக்க வைப்பது, படம் எடுப்பது? :

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைலில் AirSelfieக்கான பிரத்யேக இலவச Appஐ தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், 

அந்த app மூலம் மிக சுலபமாக AirSelfie கேமராவை கட்டுப் படுத்தலாம். 20 மீட்டர் சுற்று வட்டாரத்தி  ற்குள் இதனை இயக்க முடியும். 

பறக்க விட்டு சரியான ஆங்கிளைத் தேர்ந் தெடுத்ததும் 10 செகன்ட் வரை உள்ள டைமரை செட் செய்து விட்டு உங்கள் மொபைலை ஓரமாக வைத்து விட்டு போட்டாக்கு போஸ் கொடுத்தால் போதுமானது.

இதில் உள்ள 5MP கேமரா வண்ண மயமான HD படங்கள், வீடியோ மற்றும் பனோரமா ஷாட்கள் எடுக்க சிறந்தது. 

வெளிச்சம் குறைவான இடங்களில் கூட நல்ல தரமான படங்களை இதனை கொண்டு எடுக்க முடியும்.
மெமரி மற்றும் பேட்டரி:

AirSelfie கேமராவில் 4GB பில்ட் இதன் மைக்ரோ SD கார்டுடன் வரவுள்ளது.

260mAh 7.4 லிப்போ பேட்டரி தொடர்ந்து 3 நிமிடம் பறக்க போதுமானது.

சிறப்பம்சங்கள்:

பறக்கும் பொழுது நிலை தடுமாறாமல் சீராக இயங்க கேமராவின் அடிப் பகுதியில் altitude சென்சார் மற்றும் stability கேமரா பொருத்தப் பட்டுள்ளது. 

இந்த வசதியால் வீடியோ க்களை சீராக பதிவு செய்ய முடியும். இதனை வானில் வேகமாக செலுத்த 4 சுழலும் Brushless மோட்டார்கள் பொருத்தப் பட்டுள்ளது, 
கேமரா நம் கைகளில் பத்திரமாக தரை யிறங்கவும், கேமரா பறந்து கொண்டி ருக்கும் போது அதனை சுலபமாக கைகளில் பிடிக்கும் விதமாகவும் இந்த இறக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.

விலை!

2017 மார்ச்சில் வெளியாக உள்ள இந்த AirSelfie கேமரா 300$ வரை விலை இருக்கும் என்று எதி ர்பார்க்கப் படுகிறது, அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் 20,000 ரூபாய்.
Tags:
Privacy and cookie settings